ஜனநாயகன்” படம் இணையத்தில் வெளியான விவகாரம் படத்தொகுப்பாளர் இடைக்கால நீக்கம்!

ஜனநாயகன்” படம் இணையத்தில் வெளியான விவகாரம் படத்தொகுப்பாளர் இடைக்கால நீக்கம்!

சென்னை 24 ஏப்ரல் 2026 படத்தொகுப்பாளர் திரு. பிரதீப் E ராகவ் அவர்கள் தென்னிந்திய திரைபடத் தொகுப்பாளர் சங்கத்தின் சட்ட விதிகளை மதிக்காமல் தொடர்ந்து ஜனநாயகன் உட்பட தான் பணியாற்றும் அணைத்து திரைப்படங்களுக்கும் சங்க உறுப்பினர் அல்லாதவர்களை உதவியாளராக பயன்படுத்துவது சங்க செயற்குழு முன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு சங்க சட்ட விதிகளுக்கு எதிரானது.

மேலும் “ஜனநாயகன்” திரைப்படம் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியாக நேரடியாக திரு. பிரதீப் E, ராகவ் அவர்கள் காரணம் இல்லை என்றாலும், அவரது கவனக்குறைவே காரணமாக அமைந்துள்ளது என்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்த நிலை தொடர்ந்தால் திரைப்பட துறையே செயலிழந்து போகும் அபாயம் உள்ளது.

எதிர்காலத்தில் இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்காமல் தடுக்கும் கடமை தென்னிந்திய திரைப்படத் தொகுப்பாளர் சங்கத்திற்கு உள்ளது.

படத்தொகுப்பாளர்கள் திரைத்துறையின் பாதுகாப்பு மற்றும் சங்கத்தின் மாண்பை காப்பாற்ற வேண்டி 17.04.2026 அன்று நடந்த அவசர செயற்குழு கூட்டத்தில், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் முன்னணி முன்னிலையில் கலந்தாலோசிக்கப்பட்ட கருத்துக்களை கவனத்தில் கொண்டு திரு. பிரதீப் E. ராகவ் அவர்களை தென்னிந்திய திரைப்பட தொகுப்பாளர் சங்கம் “இடை நீக்கம்” செய்து இந்த அறிவிப்பை வெளியிடுகிறது.

இந்த இடை நீக்க காலத்தில் சங்கம் திரு. பிரதீப் E. ராகவ் அவர்களுக்கு எந்தவிதமான ஒத்துழைப்பும் வழங்காது எனவும், மேலும் சகோதர சங்கங்கள் இந்த அறிவிப்புக்கு முழு ஆதரவு தருமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

error: Content is protected !!