உலகளவில் தளபதி விஜய் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய  “ஜனநாயகன்” திரைப்படத்தின் டிரெயிலர் இன்று வெளியானது !

உலகளவில் தளபதி விஜய் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய  “ஜனநாயகன்” திரைப்படத்தின் டிரெயிலர் இன்று வெளியானது !

சென்னை 03 ஜனவரி 2026 ஜனநாயகன்’ தளபதி நடிகர் விஜய்யின் திரையுலகப் பயணத்தில் இறுதியான திரைப்படம் அவர் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன்பாக தமிழ் திரைப்பட உலகில் நடிக்கும் இறுதித் திரைப்படம் என்பதால் இந்த  ஜனநாயகன் உலகளவில் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த ஜனநாயகன் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ந்தேதி அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இசையமைப்பாளர் அனிருத் இசையில் இதுவரை வெளியான நான்கு பாடல்களும் மிகப்பெரிய அளவில் செம ஹிட். குறிப்பாக தளபதி கச்சேரி பட்டித்தொட்டி எங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

நேற்று வெளியான “ராவண மகண்டா” பாடல் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு  அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நடிகர் விஜய்யின் திரையுலகப் பயணத்தில் மிக முக்கியமான திரைப்படமாக  ரசிகர்களால் விரும்பப்படும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் டிரெயிலர் வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் எதிர்பார்த்ததை விட, டிரெய்லரில் தளபதி விஜய்யின் அரசியல் வருகை உறுதி செய்யப்படும் அளவிற்கு  மறைமுகமான வசனங்கள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளது.

https://youtu.be/fJaAYcERf3Y?si=QLkTtGgkXzrdSqC6

error: Content is protected !!