’இதயம் முரளி’ திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :-  அதர்வா, ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், நாட்டி நட்ராஜ், தமன் எஸ், நிஹாரிகா, ரக்ஷன், திராவிட், ஏஞ்சலின், அஞ்சு குரியன், சுதாகர், யஷஸ்ரீ, ஜோனிடா, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- ஆகாஷ் பாஸ்கரன்.

ஒளிப்பதிவாளர் :- மனோஜ் பரமஹம்சா, சிஎச் சாய் .

படத்தொகுப்பாளர் :- பிரதீப் இ ராகவ்.

இசையமைப்பாளர் :- தமன் எஸ்.

தயாரிப்பு நிறுவனம் :- டான் பிக்சர்ஸ்.

தயாரிப்பாளர் :- ஆகாஷ் பாஸ்கரன்.

மக்கள் தொடர்பு :- சதீஷ் ( AIM )

ரேட்டிங் :-  3.75./5.

கதாநாயகன் அதர்வாவின் முதல் காதல் தோல்வியில் முடிந்ததால், அந்த காதல் தோல்வியின் வலியை மறக்க மருந்து மற்றொரு காதல், என்று வரிசைப்படுத்தி காதலித்துக் கொண்டிருக்கும் கதாநாயகன் அதர்வா, காதலித்த எந்த காதலும் வெற்றி பெறாததால், தன்னுடைய மாமா நட்டி நட்ராஜ் பார்த்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள  முடிவு செய்கிறார்.

கதாநாயகன் அதர்வாவின் காதல் தோல்விகளின் கதை  ஒரு பக்கம் இருக்க, காதல் கைகூடாமல் போனால் என்ன, தான் திருமணம் செய்து கொள்ளப் போகும் தன்னுடைய மனைவியை காதலிக்கலாம் என்ற முடிவில் வருகிறார் கதாநாயகன் அதர்வா, காதலில் வெற்றி பெறாத கதாநாயகன் அதர்வா தனது மாமா நட்பு நடராஜ் திருமணம் செய்து வைக்கும்  திருமணத்தில் வெற்றி பெற்றாரா?, இல்லை வெற்றி பெறவில்லையா?, என்பதுதான் இந்த, ‘இதயம் முரளி’, திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ‘இதயம் முரளி’ திரைப்படத்தில் கதாநாயகனாக அதர்வா நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் அதர்வா  இந்த திரைப்படத்தில், தான் உடை நடை நடிப்பு என அனைத்தும்  புதிதாக காட்டியிருக்கிறது.

காதல் காட்சிகளில் கவனம் ஈர்க்கும் விதத்தில் மிக சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் கதாநாயகிகளாக ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர் இருவரும் நடித்திருக்கிறார்கள்.

கதாநாயகிகளாக நடித்திருக்கும் ப்ரீத்தி முகுந்தன் மற்றும் கயாடு லோஹர் இருவரும், கண்களால் பார்ப்பது, சிரிப்பது, கண் சிமிட்டுவது என்று தங்கள் அழகு மூலமாகவே காதல் காட்சிகளின் தங்களது நடிப்பு மூலம் அதிகரிக்க செய்திருக்கிறார்கள்.

கதாநாயகன் அதர்வாவின் மாமா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நட்டி நட்ராஜை காக்கி சட்டை இல்லாமல் பார்ப்பதே பெரும் ராசிகளுக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருக்க, மிகச் சிறப்பான நடிப்பை பார்ப்பது கூடுதல் ஆனந்தம் தருகிறது.

இசையமைப்பாளர் தமன்.எஸ், நிஹாரிகா, ரக்‌ஷன், டிராவிட், ஏஞ்சலினா, அஞ்சு குரியன், சுதாகர், யாஷாஸ்ரீ, ஜோனிதா ஆகியோர் காமெடி கதாபாத்திரங்களாகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களாகவும் திரையில் தோன்றி சிறப்பான நடிப்பை கொடுத்து திரைப்படத்திற்கு சிறப்பு சேர்த்து இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.

இசையமைப்பாளர் தமன்.எஸ் இசையில் பாடல்கள் அனைத்தும் தற்போதைய டிரெண்டுக்கு ஏற்றபடி உள்ளது .

பின்னணி இசை திரைக்கதை ஓட்டத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கிறார்.

கதாநாயகனின் பல காதல் தோல்வியும், அதன் பின்னணி நடக்கும் சுவாரஸ்யங்களும், பல திரைப்படங்கள் பார்த்திருந்தாலும், இந்தத் திரைப்படத்தில் தன்னுடைய பாணியில் வித்தியாசமாக சொல்லி மிக சிறப்பாக இயக்கி இருக்கிறார் இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன்.

மிகச் சிறப்பான காட்சிகள் அருமையான வசனங்களுடன்  பிரமாண்டமாக சொல்வதில் பெரும் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன்.

மொத்தத்தில், ‘இதயம் முரளி’ கலர்புல்லான காதலை  எமோஷனல் கலந்த கதையில் நகைச்சுவைக்கும் முக்கியத்துவம் கொடுத்து அனைத்து தரப்பினரையும் ரசிக்க வைத்துள்ளார்.

error: Content is protected !!