கிஸ் திரைப்பட விமர்சனம்.

நடிகர் & நடிகைகள் :- கவின், ப்ரீத்தி அஸ்ரானி, விடிவி கணேஷ், மிர்ச்சி விஜய், பிரபு, விஜய் டிவி ஷக்தி, தேவயானி, ராவ் ரமேஷ், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- சதீஷ் கிருஷ்ணன்.

ஒளிப்பதிவாளர் :- ஹரிஷ் கன்னா.

படத்தொகுப்பாளர் :- ஆர்.சி.பிரனாவ்.

இசையமைப்பாளர் :- ஜென் மார்ட்டின்.

தயாரிப்பு நிறுவனம் :- ரோமியோ பிக்சர்ஸ்.

தயாரிப்பாளர் :- ராகுல்.

ரேட்டிங் :- 2.5/5.

கதாநாயகன் கவினுக்கு காதல் என்பதே பிடிக்காது அனால் காதல் ஜோடிகள் முத்தம் கொடுப்பதை பார்த்துவிட்டால், முத்தம் கொடுத்த காதல் ஜோடிகள் அவர்களுக்கு எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதை தெரிந்துக் கொள்ளும் ஆற்றல் கதாநாயகன் கவினுக்கு இருக்கிறது.

இதனால், காதலர்கள் அனைவரும் முத்தமிடுவதை பார்க்கும் போது அவர்களது எதிர்காலத்தை அறிந்து, கொள்ளும் அவர்களை பிரிக்கும் செயல்களில் கதாநாயகன் கவின் ஈடுபடுகிறார்.

கதாநாயகி ப்ரீத்தி அஸ்ரானியுடன் கதாநாயகன் கவினுக்கு நட்பாக கிடைக்க அந்த நட்பு அவர் மீது காதலாக மலர்கிறது.

கதாநாயகி ப்ரீத்தி அஸ்ரானி கதாநாயகன் கவின் இருவரும் காதலை சொல்லிக் கொள்ளாத நிலையில், கதாநாயகி ப்ரீத்தி அஸ்ரானி திடீரென்று கதாநாயகன் கவினுக்கு முத்தக் கொடுத்து விடுகிறார்.

கதாநாயகன் கவினுக்கு கதாநாயகி ப்ரீத்தி அஸ்ரானி முத்தம் கொடுத்தவுடன் எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகிறது, என்பதை கண் முன் தெரிந்துக் கொள்ளும் கதாநாயகன் கவின், காதலை நிராகரிக்கத் தொடங்குகிறார்.

கதாநாயகன் கவினின் இந்த விசித்திர ஆற்றலின் பின்னணி என்ன ? கதாநாயகன் கவினுக்கு கதாநாயகி ப்ரீத்தி அஸ்ரானி இருவரும் ஒன்று காதலில் சேர்ந்தார்களா ?, ஒன்று சேரவில்லையா? என்பதுதான் இந்த ‘கிஸ்’ திரைப்படத்தின மீதிக்கதை.

இந்த கிஸ் திரைப்படத்தில் கதாநாயகனாக கவின் நடித்திருக்கிறார்.

கதாநாயகன் கவின் காதலை வெறுப்பவராகவும், காதலர்களுக்கு எதிராக செயல்படுபவராகவும் இருந்து பிறகு காதலர்களை பிரிக்கும் போதும் சரி, காதலுக்காக ஏங்கும் போதும் சரி, தன்னுடைய காதலுக்காக எங்கும் போதும் சரி அனைத்து காட்சிகளிலும் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.

இந்த கிஸ் திரைப்படத்தில் கதாநாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி, நடித்துள்ளார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் ப்ரீத்தி அஸ்ரானி, இளமை ததும்ப ததும்ப வலம் வருகிறார்.

நடிக்க வாய்ப்புள்ள கதாபாத்திரத்தில் மிகவும் நன்றாகவே நடித்து திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை கவனத்தை தனது பக்கம் திருப்புவதில் வென்றிருக்கிறார்.

கதாநாயகனின் நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடித்திருக்கும் ஆர்ஜே விஜய் மற்றும் அவரது தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடித்திருக்கும் விடிவி கணேஷ், காமெடி ஏரியாவை தங்கள் வசம் வைத்துக்கொண்டு இருவரும் இணைந்து திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைத்திருக்கிறார்கள்.

கதாநாயகனின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடித்திருக்கும் ராவ் ரமேஷ் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக நடித்திருக்கிறார்.

கதாநாயகனின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தேவயானி, பொருந்தாத உடை மற்றும் லுக்கில் உறுத்தலாக வந்து போகிறார்.

சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இளைய திலகம் பிரபு, கெளசல்யா இருவரின் திரை இருப்பு திரைக்கதைக்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் ஹரிஷ் கண்ணனின் ஒளிப்பதிவு மூலம் காட்சிகள் அனைத்தும் கலர்புல்லாக, காடசி கதாபாத்திரங்களில் இருக்கும் இளமையை காட்சிகளிலும் மிக மிக அருமையாக திரைப்படமாக்கியிருக்கிறார்

இசையமைப்பாளர் ஜென் மார்டின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசையும் , திரைக்கதை ஏற்றவாறு பயணித்திருக்கிறார்.

இளைஞர்களுக்கான திரைப்படமாக கொடுக்கும் முயற்சியில், ஆண் பெண் பரிமாறிக் கொள்ளும் முத்தத்தை வைத்து மாபெரும் காதல் காதலர்கள் யுத்தத்தை மிகப் பெரிய அளவில் நடத்தி இருக்கிறார் இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன்.

மொத்தத்தில், ‘கிஸ்’ முத்தத்தால் சிறப்பு சேர்த்து இருக்கிறது.

error: Content is protected !!