’ராவ் பகதூர்’ திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- சத்ய தேவ், விகாஸ் முப்பாலா, தீபா தாமஸ், பால பராசர், ஆனந்த பாரதி, பிரனய் வகா, மாஸ்டர் கிரண், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- வெங்கடேஷ் மஹா
ஒளிப்பதிவாளர் :- கார்த்திக் பர்மர்.
படத்தொகுப்பாளர் :- வெங்கடேஷ் மஹா.
இசையமைப்பாளர் :- ஸ்மரன் சாய்.
தயாரிப்பு நிறுவனம் :- ஸ்ரீசக்ராஸ் என்டர்டெயின்மென்ட்ஸ், ஏ+எஸ் மூவிஸ், பெட்டர் இன்வெஸ்ட் மீடியா விஷன் ஃபண்ட், மஹாயான மோஷன் பிக்சர்ஸ் GMB என்டர்டெயின்மென்ட்.
தயாரிப்பாளர்கள் :- சிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி, அனுராக் ரெட்டி, சரத் சந்திரா, ஈஷ்வரன் விஜயராகவன்.
மக்கள் தொடர்பு :- சதீஷ்குமார் சதீஷ்குமார் (S2 மீடியா )
ரேட்டிங் :- 3.5./5.
ராஜா பரம்பரைரையை சேர்ந்த கதாநாயகன் சத்ய தேவ், வயது அதிகமான காரணத்தால், உடல்நிலை சரியில்லாமலும் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டு தன்னுடைய வாழ்நாளின் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார்.
உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த கதாநாயகன் சத்ய தேவ், டாக்டர்கள் சொன்ன கெடுவை தாண்டியும் உயிருடன் இருக்கும் கதாநாயகன் சத்ய தேவ், தன்னுடைய மனதுக்குள் இருக்கும் மிகப்பெரிய சந்தேகம் ஒன்று மனதை போட்டு உருத்தி கொண்டிருக்கிறது.
கதாநாயகன் சத்ய தேவ், மனதில் இருக்கும் மிகப்பெரிய அளவில் இருக்கும் சந்தேகத்தை தீர்த்து வைத்துவிட்டால், நான் நிம்மதியாக கண்ணை மூடிவிடுவேன், என தன்னுடைய நண்பர், மருத்துவருமான விகாஸிடம் கூறுகிறார்.
கதாநாயகன் சத்ய தேவ், மனதில் இருக்கும் அந்த சந்தேகம் என்ன ?, என்பதுதான் இந்த *ராவ் பகதூர் திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ராவ் பகதூர் திரைப்படத்தில் கதாநாயகனாக சத்ய தேவ், நடித்திருக்கிறார்.
ராம்ப்பா ராவ் பகதூர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சத்ய தேவ், முழு திரைப்படத்தையும் தன் நடிப்பின் மூலம் ஒற்றை ஆளாக தனது தோளில் சுமந்திருக்கிறார்.
இளமை காலம் மற்றும் முதுமை காலம் என இரண்டு இரண்டு தோற்றங்களை தனது உடை மற்றும் ஒப்பனை மட்டும் இன்றி, உடல் மொழி, சிறு சிறு அசைவுகள், வசன உச்சரிப்பு என அனைத்திலும் மிக நேர்த்தியாக நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்.
இந்த ராவ் பகதூர் திரைப்படத்தில் கதாநாயகியாக தீபா தாமஸ், நடித்திருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் தீபா தாமஸ், தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை எந்த விதமான குறையும் இல்லாமல், நடித்திருப்பதோடு இறுதிக் காட்சியில் எதிர்பார்க்காத ரகசியத்தை உடைத்து திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்.
கதாநாயகன் சத்ய தேவ் நண்பர் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விகாஸ் மப்புலா நடிப்பின் மூலம் திரைக்கதை ஓட்டத்திற்கு கைகொடுக்கும் விதத்தில் நடித்திருக்கிறார்.
இந்த ராவ் பகதூர் திரைப்படத்தில் நடித்திருக்கும் பாலா பரசர், ஆனந்த் பாரதி, பிரணய் வேகா, மாஸ்டர் கிரண் என அனைத்து நடிகர்களும் கதாபாத்திரங்கள் அனைத்தும் சிறப்பாக பயணித்து ரசிகர்கள் மனதில் நின்று விடுகிறார்கள்.
ஒளிப்பதிவாளர் கார்த்திக் பரமர், ஒளிப்பதிவு மூலம் பீரியட் திரைப்படத்திற்கான வழக்கமான பாணியை கையாளாமல், மிகவும் வித்தியாசமான பாணியில் கையாண்டு, சிறப்பு சேர்த்து இருக்கிறார்.
இசையமைப்பாளர் ஸ்மரன் சாய் பின்னணி இசை திரைப்படத்திற்கு பெரும் பலமாக அமைந்திருக்கிறது.
தெலுங்கு திரைப்பட உலகில் இப்படி ஒரு திரைப்படம் இதற்கு முன் வந்திருக்குமோ…! என்று ஆச்சரியப்பட வைக்கும் அளவுக்கு, உளவியல் ரீதியான பீரியட் திரைப்படத்தை மிக வித்தியாசமான கதை மற்றும் திரைக்கதை சிறப்பான வடிவத்தில் இயக்கியிருக்கிறார் இயக்குநர் வெங்கடேஷ் மஹா.
மொத்தத்தில், ’ராவ் பகதூர்’ திரைப்படம் சமூக அக்கறையுடன் கூடிய ஒரு சிறந்த கற்பனைப் படைப்பு.











