‘பராசக்தி’ திரைப்பட விமர்சனம்.

நடிகர் & நடிகைகள் :- சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, ரானா டகுபதி, சேத்தன், பிருத்வி பாண்டியராஜன், காளி வெங்கட், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- சுதா கொங்கரா.

ஒளிப்பதிவாளர் :- ரவி கே. சந்திரன்.

படத்தொகுப்பாளர் :- சதீஷ் சூர்யா.

இசையமைப்பாளர் :- ஜி.வி.  பிரகாஷ் குமார்.

தயாரிப்பு நிறுவனம் :- டான் பிக்சர்ஸ்.

தயாரிப்பாளர் :- ஆகாஷ் பாஸ்கரன்.

ரேட்டிங் :- 4.75./5.

1960களில் இந்தி எதிர்ப்பு போராட்டம் எப்படி உச்சத்தில் இருந்தது, மாணவர்கள் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை தொடங்கினாலும் அதன் பிறகு அதை கையில் எடுத்துக் கொண்டது திராவிட முன்னேற்ற கழகம்.

இந்தி எதிர்ப்பு போராட்டம் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி அமைப்பதற்கும், பேரறிஞர் அண்ணா முதலமைச்சராவதற்கும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது.

அன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு ஊரிலும் கல்லூரியில் உள்ள மாணவ மாணவிகளின் தலைவர்கள் தான் கதாநாயகர்களாக இருந்து இந்தி எதிர்ப்பு போராட்டத்தை முன்னிட்டு நடத்தினார்கள்.

நடிகர் சிவகார்த்திகேயனின் 25 ஆவது திரைப்படம் இந்த பராசக்தி திரைப்படம் பொங்கல் விருந்தாக 2026 ஜனவரி 10 ஆம் தேதி அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

கல்லூரி மாணவர் கதாநாயகன்  சிவகார்த்திகேயன் புறநானூறு என்ற ஹிந்தி எதிர்ப்பு அமைப்பை தலைமை ஏற்று நடத்தி வருகிறார்.

புறநானூறு என்ற ஹிந்தி எதிர்ப்பு அமைப்பை சார்பாக நடக்கும் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது கதாநாயகன்  சிவகார்த்திகேயன் மற்றும் அமைப்பு சேர்ந்த மாணவர்கள் இணைந்து ரயிலை தீ வைத்து கொளுத்தி விடுகிறார்.

எதிர்பாராத விதமாக இந்த கலவரத்தில் கதாநாயகன் சிவகார்த்திகேயன் நண்பர் ஒருவர் இறந்து விடுகிறார்.

இதனால் நண்பர் ஒருவர் இறந்ததால் மனமுடைந்த கதாநாயகன் சிவகார்த்திகேயன் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை கைவிட்டு ரயில்வேயில் பணியில் சேர்ந்து விடுகிறார்.

சில வருடங்கள் கழித்து தனது தம்பி அதர்வா ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை தன்னுடைய மாணவர்களுடன் இணைந்து  ஹிந்தி எதிர்ப்பை போராட்டத்தை மேற்கொள்கிறார்.

அந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது கதாநாயகன் சிவகார்த்திகேயனின் தம்பி காவல் துறையினரால்  துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டு விட, மீண்டும் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை கையில் எடுத்து ஹிந்தி திணிப்பை கதாநாயகன் சிவகார்த்திகேயன் எதிர்க்கிறார்.

கைவிட்ட ஹிந்தி எதிர்ப்பை போராட்டத்தை கையில் எடுத்த கதாநாயகன் சிவகார்த்திகேயன் வெற்றி பெற்றாரா?, வெற்றி பெறவில்லையா?,

இந்த நிலையில் கதாநாயகன் சிவகார்த்திகேயன் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டாரா?,  சுட்டுக் கொல்லப்படவில்லையா?, என்பதுதான் இந்த “பராசக்தி” திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த “பராசக்தி” திரைப்படத்தில் கதாநாயகனாக சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் சிவகார்த்திகேயன் நடனம் ஆக்சன் செண்டிமெண்ட்  போராட்டம் என மிகச் சிறப்பான நடிப்பைஸ கொடுத்து அசத்தி இருக்கிறார்.

இந்த பராசக்தி திரைப்படம் சிவகார்த்திகேயனின் 25 வது திரைப்படம் மாபெரும் வெற்றி திரைப்படம் ஆக அமைந்திருக்கிறது.

வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரவி மோகன் அமைதியும், கொடூரமும் கலந்த வில்லனாக தமிழ் திரைப்பட உலகிற்கு கொடூரமான வில்லன் கிடைத்து விட்டார்.

கதாநாயகன் சிவகார்த்திகேயனின் தம்பி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதர்வா முரளி மிகவும் அருமையான நடிப்பை கொடுத்து கதாபாத்திரத்திற்கு சிறப்பு சேர்த்து இருக்கிறார்.

இந்த பராசக்தி திரைப்படத்தில் கதாநாயகியாக ஸ்ரீ லீலா நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் ஸ்ரீலிலா மிகவும் அழகாக வந்து சிறப்பான நடிப்பை நடனம் என திரைப்படத்திற்கு சிறப்பு சேர்த்து இருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் ஸ்ரீ லீலாவின் நடிப்பு கிளைமாக்ஸ் காட்சியில் மிகவும் அருமையாக அமைந்திருக்கிறது.

இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் ரானா டகுபதி, சேத்தன், பிருத்வி பாண்டியராஜன், காளி வெங்கட், அனைவரும் கதாபாத்திரத்தை உணர்ந்து மிகச் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு முலம் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்திருக்கிறார்.

இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் குமாரின் இசையில் அனைத்து பாடல்களும் சிறப்பாக இருந்தாலும் தெலுங்கு மொழியில் தொடங்கும் பாடல் மிகவும் ‘காதலுடன்’ இருக்கிறது.

இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் குமாரின் பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்து இருக்கிறது.

இன்று பராசக்தி திரைப்படத்தில் காட்சியில்
எரித்தது நான் இல்லை, ஆனால் செய்தது என் தம்பி தான்” என அண்ணாதுரை கேரக்டரில் வரும் சேத்தன் சொல்வது, “நாங்க சொல்றது யூனிட்டி, நீங்க சொல்றது யூனிபாமிட்டி” என்று ஹிந்தி திணிப்பை பிரதமர் இந்திரா காந்தியிடம் கதாநாயகன் சிவகார்த்திகேயன் பேசுவது, போன்ற அனல் பறக்கும் வசனங்கள் சபாஷ் போட வைக்கிறது.

இயக்குனர் சுதா கொங்காரா இன்றைய மத்திய அரசின் சில செயல்பாடுகளை மனதில் வைத்து, இனி ஹிந்தி மொழி திணிப்பு நடந்தால் இப்படி நடக்கும் என்று சொல்லாமல் சொல்கிறாரா? இதற்காகத்தான் மத்திய அரசின் தணிக்கை குழு இந்த திரைப்படத்தை வெளியிட தயக்கம் காட்டியதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

தமிழ் மொழியை காப்பாற்ற, உயிரையும் நீத்த மாணவர்கள் புரட்சியை இன்றைய இளம் தலைமுறையினர், அறிந்து கொள்ள, ஒரு அற்புதமான திரைப்படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் சுதா கொங்காரா அவர்களுக்கு எங்கள் MOVIEWINGZ .COM இணையத்தளம் சார்பில் மிகப்பெரிய வாழ்த்துக்கள.

மொத்தத்தில், – இந்த”பராசக்தி” திரைப்படம் வராலாற்றை பதிவு செய்யும் ஒரு முயற்சி!

error: Content is protected !!