கவிப்பேரரசு கவிஞர் வைரமுத்து அவர்கள் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் ஆயுட்கால உறுப்பினராக இணைந்தார்!
கவிப்பேரரசு கவிஞர் வைரமுத்து அவர்கள் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் ஆயுட்கால உறுப்பினராக இணைந்தார்!
சென்னை 03 அக்டோபர் 2026 தமிழ் திரையுலகின் முன்னணி கவிஞரும், பாடலாசிரியருமான கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் ஆயுட்கால உறுப்பினராக இணைந்துள்ளார்.
இன்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் இயக்குநர் திரு. சேரன், பொதுச்செயலாளர் திரு. பட்டுக்கோட்டை பிரபாகர், பொருளாளர் திரு. R. சுந்தர்ராஜன், துணைத்தலைவர் திரு. சினேகன் மற்றும் செயற்குழு உறுப்பினர் இயக்குநர் திரு. KBB நவீன் ஆகியோர் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களை நேரில் சந்தித்தனர்.
அப்போது, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் இணைந்து, சங்கத்தின் செயல்பாடுகளுக்கு தங்களது ஆதரவை வழங்குமாறு நிர்வாகிகள் சார்பில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள், ரூபாய் 1 லட்சம் உறுப்பினர் கட்டணமாக செலுத்தி, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினராக அதிகாரப்பூர்வமாக இணைந்தார்.
திரைப்பட எழுத்தாளர்கள் மற்றும் படைப்பாளர்களின் நலன், உரிமைகள் மற்றும் வளர்ச்சிக்காக செயல்பட்டு வரும் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில், தமிழ் திரையுலகின் மூத்த மற்றும் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவரான வைரமுத்து அவர்கள் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்க நிகழ்வாக அமைந்துள்ளது.
வைரமுத்து அவர்களின் இந்த இணைப்பு, சங்கத்தின் செயல்பாடுகளுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் அமைந்துள்ளதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.











