டோன்ட் ட்ரபுள் தி ட்ரபுள்’ திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- ​ஃபஹத் ஃபாசில், சாரா பாலேகர், மகேஷ் மஞ்ச்ரேகர், சௌரப் சச்தேவா, வெங்கடேஷ் காகுமானு,  சுப்பராஜு, திவ்யா பிள்ளை, எஸ். எஸ்.  ஷஷாங்க், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- ஷஷாங்க் யேலேட்டி.

ஒளிப்பதிவாளர் :- பிராட் பிரான்சிஸ் ACS.

படத்தொகுப்பாளர் :- பிரவீன் ஆண்டனி.

இசையமைப்பாளர் :- கால பைரவா.

தயாரிப்பு நிறுவனம் :- ஆர்கா மீடியா வொர்க்ஸ் / ஷோயிங் பிசினஸ்.

தயாரிப்பாளர்கள் – எஸ். எஸ். ராஜமௌலி / ஷோபு யார்லகட்டா / பிரசாத் தேவினேனி / எஸ். எஸ். கார்த்திகேயா.

மக்கள் தொடர்பு :- யுவராஜ்.

வெளியீட்டு தேதி :- 02 அக்டோபர் 2026.

ரேட்டிங் :-  3.5/5.

ஆம்புலன்ஸ் டிரைவரான கதாநாயகன் பகத் பாசில்  பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்பவன்,  ஆட்டுக்கிடா சண்டை பந்தயத்தில் கதாநாயகன் பகத் பாசிலால்  ஏமாற்றப்பட்ட ஒருவன் 25 பணத்தை பணத்தைக் கேட்டு விரட்டுகிறான்.

இந்த நிலையில் ஒரு சிறுமி சாரா பலேக்கர் ஒரு. நாய்க்குட்டி இரண்டையும் கடத்தி கதாநாயகன் பகத் பாசில் பணம் பறிக்க நினைக்கிறார்.

கதாநாயகன் பகத் பாசிலை மிகப்பெரிய மேஜிக் மேன் என  சிறுமி சாரா பலேக்கர், நம்புகிறாள்.

சிறுமி சாரா பலேக்கர் இடம் கதாநாயகன் பகத் பாசில் நாம் இருந்த புதிய மேஜிக் நான் மேஜிக் செய்வேன் என கூறுகிறார்.

சிறுமி சாரா பலேக்கர் நான் மேஜிக் செய்து என்னுடைய அப்பா அம்மாவை மறைய வைத்து விட்டதாகவும் வீட்டுக்கு கொண்டு போய் விட்டு விடு என்று முகவரியும் சொல்கிறாள்.

சிறுமி சாரா பலேக்கர் அப்பா அம்மாவிடம் பணம் கேட்டு மிரட்டி பணத்தை பெற்றுக்  கொண்டு சிறுமி சாரா பலேக்கர் தந்தை கொடுக்கும் அந்த பணத்தை வைத்து கொடுக்க வேண்டிய கடனை அடைத்து விடலாம் என கதாநாயகன் பகத் பாசில் எண்ணுகிறான். 

கதாநாயகன் பகத் பாசிலுக்கு எந்த பிரச்னையும் இல்லாமல் அப்படி சிறுமி சாரா பலேக்கர் ஒப்படைத்து பணம் பெரும் அவனது முயற்சி எல்லாம் நடக்காமல் போகிறது. 

இந்த நிலையில் அந்த சிறுமி சாரா பலேக்கர் சூப்பர் பவர் இருப்பது கதாநாயகன் பகத் பாசிலுக்கு தெரிய வருகிறது.

அவள் செத்துப் போனவள் என்பதும் சிறுமி சாரா பலேக்கர் கதாநாயகன் பகத் பாசில் கண்ணுக்கு மட்டுமே தெரிகிறாள் என்பதும் சிறுமி  கோவிலுக்குள் கூட வருவாள்  என்பதும் தெரிய வருகிறது.

சிறுமி சாரா பலேக்கர் இறந்த காரணம் அறிய கதாநாயகன் பகத் பாசில் விரும்பும்போது சிறுமி சாரா பலேக்கர் மாமா சவுரப் சச்தேவா அவருக்கு நெருக்கமான காவல்துறை  அதிகாரி சுப்பாராஜு  கதாநாயகன் பகத் பாசில் நண்பன் (வெங்கடேஷ் காக்கமுனு ஊரில் உள்ள நிலத்தை விற்று உதவி செய்ய  வந்திருக்கும் நேரத்தில் காவல்துறையினரிடம் சிக்குகிறார்கள்.

சிறுமி சாரா பலேக்கர் மட்டுமல்ல சிறுமியின் அம்மா அப்பா இருவரையும் கூட கதாநாயகன் பகத் பாசில் ஏதோ செய்து விட்டதாக நம்பும் காவல்துறையினர் அடித்துத் விசாரிக்கிறார்கள்.

கதாநாயகன் பகத் பாசில் சிறுமி சாரா பலேக்கர் அப்பா அம்மா என்ன ஆனார்கள் இருவரும் உயிருடன் இருக்கிறார்களா?, உயிருடன் இல்லையா?

சிறுமி சாரா பலேக்கர் நடந்தது என்ன? என்பதுதான் இந்த ‘டோன்ட் ட்ரபுள் தி  ட்ரபுள்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ‘டோன்ட் ட்ரபுள் தி  ட்ரபுள்’ திரைப்படத்தில் கதாநாயகனாக பகத் பாசில் நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் பகத் பாசில் வழக்கம் போல கலகலப்பான கதாபாத்திரத்தில்  துரு துரு நடிப்பு படத்துக்கு பலம் சேர்ப்பதுடன் ரசிக்க வைக்கிறார்.

சிறுமி சாரா பலேக்கர் கதாநாயகனாக நடித்திருக்கும் பகத் பாசிலுக்கு ஈடு கொடுத்து நடித்து வியக்க வைத்துள்ளார்

சிறுமி சாரா பலேக்கர் கலகலப்பான நடிப்பு ரசிகர்கள் கவனத்தை ஈர்க்கிறது.

மகேஷ் மஞ்ரேக்கர், சவுரப் சச்தேவ், வெங்கடேஷ் காகமனு, சுப்புராஜூ, திவ்யா பிள்ளை, சஷாங்க் உள்பட அனைவருமே கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் பிராட் பிரன்சிஸ் ஒளிப்பதிவு மூலம் காட்சிகள் கண்களுக்கு விருந்து படைக்கும்  விதமாக மாயாஜால உலகை விரும்பும் சுட்டீஸ்களுக்கு நிச்சயம் விருந்து தான்.

இசையமைப்பாளர் கால பைரவா இசையில் பாடல்கள் பின்னணி இசை திரைப்படத்துடன் நம்மை ஒன்ற வைக்கிறது.

சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்துப் பார்க்கக் கூடிய வகையில் கதையை மேஜிக் நிறைந்த ஒரு பொழுதுபோக்கு திரைக்கதை மூலம்  திரைப்படத்தை கொடுத்து கவனிக்க வைத்துள்ளார் இயக்குனர் சஷாங்க் எலேட்டி.

மொத்தத்தில், இந்த ‘டோன்ட் ட்ரபுள் தி ட்ரபுள்’  சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்துப் பார்க்கக் கூடிய திரைப்படமாக அமைந்துள்ளது.

error: Content is protected !!