‘சீன்’ திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- சூர்யா, நஸ்ரியா நசீம்,  நஸ்லென் கே. கபூர், ஆனந்தராஜ், லால், சுரேஷ் மதியழகன், ராஜ்பிரியன், ஜான் விஜய், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- ஜித்து மாதவன்.

ஒளிப்பதிவாளர் :- மனோஜ் பரமஹம்சா.

படத்தொகுப்பாளர் :- அஜ்மல் சாபு.

இசையமைப்பாளர் :- சுஷின் ஷியாம்.

தயாரிப்பு நிறுவனம் :- 2D என்டர்டெயின்மென்ட் மற்றும் ழகரம் ஸ்டுடியோஸ்.

தயாரிப்பாளர்கள் – நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா.

மக்கள் தொடர்பு :- சதீஷ்குமார் ( S2 Media)

வெளியீட்டு தேதி :- 06 நவம்பர்  2026.

ரேட்டிங் :-  4./5.

ரோமாஞ்சம்’, ‘ஆவேஷம்’ திரைப்படங்களின் மூலம் தனக்கென ஒரு வித்தியாசமான கதை சொல்லும் பாணியை உருவாக்கிய இயக்குநர் ஜித்து மாதவன், இந்தப் படத்திலும் விசித்திரமான கதாபாத்திரங்களையும் எதிர்பாராத சூழல்களையும் நகைச்சுவையுடன் இந்தத் திரைப்படத்தை கொடுத்திருக்கிறார்.

நடிகர் சூர்யா நடிப்பில், வெளியாகியுள்ள ‘சீன்’ (Scene) திரைப்படம், வழக்கமான போலீஸ் ஆக்‌ஷன் திரைப்படங்களின் பாதையில் பயணிக்காமல், நகைச்சுவை, மர்மம், குற்றப் புலனாய்வு என வித்தியாசமான அம்சங்களைக் கலந்து உருவாகியிருக்கிறார் இயக்குநர் ஜித்து மாதவன்.

நடிகர் சூர்யாவின் வழக்கமான நட்சத்திரப் பிம்பத்திலிருந்து விலகி, அவரை ஒரு புதிய பரிமாணத்தில் பார்க்கும் வாய்ப்பையும் இந்தத் திரைப்படம் வழங்குகிறது.

குற்றப்பிரிவு காவல் துறை அதிகாரியாகப் பணியாற்றும்  கதாநாயகன் சூர்யா, தனது கூர்மையான கவனிப்புத் திறன் மற்றும் நுணுக்கமான விசாரணை முறைகளால் சிக்கலான வழக்குகளையும் தீர்க்கக்கூடிய மிகப்பெரிய திறமைசாலி ஆனால், காவல்துறைப் பணியிலிருந்து விலகி ஓய்வுபெற வேண்டும் என்பதே அவரது தற்போதைய விருப்பம். இதற்காகப் பலமுறை ராஜினாமா கடிதம் கொடுத்தும், காவல்துறை மேலதிகாரி லால்  அதனை ஏற்காமல் தொடர்ந்து புதிய பொறுப்புகளை வழங்கிக் கொண்டே இருக்கிறார்.

இந்தச் சூழலில், ஏற்கெனவே முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட ஒரு தொடர் கொலை வழக்கைப் போன்றே புதிய கொலைகள் நடைபெறத் தொடங்குகின்றன.

மீண்டும் விசாரணையில் இறங்க வேண்டிய கட்டாயத்திற்கு கதாநாயகன் சூர்யா ஆளாகிறார்

இந்த பல கொலைகளின் பின்னணியில் என்ற மர்மமான நபர் இருக்கிறார்.

உண்மையில் கொடூரமான இந்த பல கொலைகளின்  குற்றங்களைச் செய்யும் அந்த மர்மமான நபரை கதாநாயகன் சூர்யா கைது செய்தாரா?, அந்த  மர்மமான நபரை கைது செய்யவில்லையா ?, என்பதுதான் இந்தத் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ‘சீன்’ திரைப்படத்தில் கதாநாயகனாக சூர்யா நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் சூர்யா இன்பராஜ் என்ற  கதாபாத்திரத்தில் மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார்.

வழக்கமான பஞ்ச் வசனங்கள், அதிரடியான அறிமுகம், அதிகப்படியான ஹீரோயிசம் என எதையும் நம்பாமல், உடல்மொழி, முகபாவனைகள், நகைச்சுவை உணர்வு ஆகியவற்றின் மூலம் கதாபாத்திரத்தை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

குறிப்பாக அவரது காமெடி டைமிங், விசாரணைக் காட்சிகளில் வெளிப்படுத்தும் புத்திசாலித்தனம், உணர்ச்சிகரமான தருணங்கள் என அனைத்திலும் ரசிகர்கள் கவனம் ஈர்க்கிறார்.

இந்த ‘சீன்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நஸ்ரியா நசீம், நடித்திருக்கிறார்.

கதாநாயகிகளாக நடித்திருக்கும் நஸ்ரியா: மாயா என்ற  கதாபாத்திரத்தில் நஸ்ரியா தனது இயல்பான நடிப்பால் திரைப்படத்திற்கு உற்சாகம் சேர்க்கிறார்.

கதாநாயகன் சூர்யாவுடன் இணைந்து வரும் காட்சிகளில் இருவருக்குமான கெமிஸ்ட்ரி ரசிக்க வைக்கிறது.

உதவியாளராக மட்டுமின்றி, தனக்கென ஒரு திறமையும் உணர்வுப்பூர்வமான பின்னணியும் கொண்ட கதாபாத்திரமாக மாயா அமைந்திருப்பது சிறப்பு.

வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நஸ்லென் கே. கபூர், ஈஸ்வரன் என்ற கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக கொடூரமாக நடித்திருக்கிறார்.

அவரது சாதாரணமான தோற்றத்திற்குப் பின்னால் மறைந்திருக்கும் கொடூரமான மனநிலையை வெளிப்படுத்தும் விதம் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களின் கவனம் ஈர்க்கிறது.

அமைதியான நடிப்பின் மூலமே ஒருவித அச்சத்தை உருவாக்குகிறார்.

இன்னும் அதிகமான காட்சிகள் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நஸ்லென் கே. கபூர், கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற எண்ணமும் ஏற்படுகிறது.

ஆனந்தராஜ், லால், சுரேஷ் மதியழகன், ராஜ்பிரியன், ஜான் விஜய், உள்ளிட்ட துணை நடிகர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட  கதாபாத்திரங்களைச் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார்கள்.

இந்தத் திரைப்படத்தின் முக்கியமான பலமே அதன் வித்தியாசமான கதை திரைக்கதை ஒரு பக்கம் தொடர் கொலைகள், மறுபக்கம் கதாபாத்திரங்களின் விசித்திரமான நடவடிக்கைகள் என இரண்டையும் இணைத்து திரைப்படத்தை சுவாரஸ்யமான இந்த திரைப்படத்தை  உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் ஜித்து மாதவன்.

மொத்தத்தில், ‘சீன்’ திரைப்படம் சிரிப்பைத் தூண்டும்  தருணங்கள் சிலிர்க்க வைக்கும் மர்மங்கள்… எதிர்பார்ப்பைத் தாண்டும் திருப்பங்கள்… சூர்யாவின் வித்தியாசமான நடிப்பில் ‘சீன்’ ஒரு சிறப்பான  சுவாரஸ்யமான திரைப்பயணம்!

CLOSE
CLOSE
error: Content is protected !!