’டெஸ்ட்’ திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் – மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின், காளி வெங்கட், ஆடுகளம் முருகதாஸ், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் – எஸ்.சசிகாந்த்.

ஒளிப்பதிவாளர் – விராஜ் சிங் கோஹில்.

படத்தொகுப்பாளர் – டி.எஸ். சுரேஷ்.

இசையமைப்பாளர் – சக்திஸ்ரீ கோபாலன்.

தயாரிப்பு நிறுவனம் – ஏ நெட்ஃபிக்ஸ் பீலிம்.

தயாரிப்பாளர்கள் – சக்ரவர்த்தி ராமச்சந்திரா & எஸ்.சஷிகாந்த்

ரேட்டிங் – 3.5./5.

இந்திய அணியின் கொண்டாடப்பட்டு வரும் கிரிக்கெட் வீரராக கதாநாயகன் சித்தார்த் அணியில் இருந்து விலக்கிவிட்டு புதியதாக கிரிக்கெட் வீரர்களை வாய்ப்பு கொடுக்க கிரிக்கெட் வாரியம் முடிவு எடுக்கிறது.

இந்த நிலையில், கதாநாயகன் சித்தார்த் தனது ஓய்வு அறிவிப்பை மீடியாவில் அறிவிக்க வேண்டும் என முடிவு எடுக்கிறார்.

தனது தோல்வியுடன் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை முடிக்க விரும்பாத கதாநாயகன் சித்தார்த், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இருவருக்கும் இடையே நடைபெற உள்ள கடைசி டெஸ்ட் போட்டியில் தனது திறமையை விளையாட்டில் நிரூபித்த பின்பு தான் ஓய்வு குறித்து அறிவிக்க வேண்டும் என நினைக்கிறார்.

இதனால், கடைசியாக நடக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இருவருக்கும் இடையே நடக்கும் டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

இது ஒரு புறம் இருக்க தண்ணீரில் இருந்து எடுக்கப்படும் ஹைட்ரஜன் என்ற எரிபொருளை வைத்து வாகனங்களை இயக்கும் முறையை கண்டுபிடிக்கும் விஞ்ஞானி கதாநாயகன் மாதவன், தனது இந்த எரிபொருள் கண்டுபிடிப்பிற்கு மாநில அரசிடம் அங்கீகாரம் பெறுவதற்கான முயற்சிகளில் கடுமையாக ஈடுபடுகிறார்.

விஞ்ஞானி கதாநாயகன் மாதவன், மனைவி நயன்தாரா, தன் கணவரின் லட்சியத்திற்கு உறுதுணையாக இருந்தாலும் , ஒரு கட்டத்தில், குழந்தை பெற்று கொள்ள வேண்டும் என்ற மனநிலையில் வாழ்ந்து வருகிறார்.

கதாநாயகன் மாதவன், கதாநாயகி நயன்தாரா, திருமணமாகி பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருப்பதால், குழந்தை பெற்றுக் கொள்ள கடைசி முயற்சியாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள முடிவு எடுக்கிறார்.

கதாநாயகன் சித்தார்த், உள்ள டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றாரா? வெற்றி பெறவில்லையா?

கதாநாயகி நயன்தாராவிற்கு கடைசி முயற்சியாக குழந்தை பெற்றுக் கொண்டாரா? பெற்றுக்கொள்ளவில்லையா?

தண்ணீரில் இருந்து எடுக்கப்படும் ஹைட்ரஜன் என்ற எரிபொருளை வைத்து வாகனங்களை இயக்கும் முறையை கண்டுபிடிக்கும் விஞ்ஞானி கதாநாயகன் மாதவன் மாநில அரசிடம் அங்கீகாரம் கிடைத்ததா? கிடைக்கவில்லையா?
என்பதுதான் இந்த ‘டெஸ்ட்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த டெஸ்ட் திரைப்படத்தில் கதாநாயகனாக மாதவன் மற்றும் சித்தார்த் நடித்திருக்கிறார்கள்.

கதாநாயகனாக நடித்திருக்கும் மாதவன், விஞ்ஞானியாகவும் சித்தார்த் கிரிக்கெட் வீரராகவும் இருவரும் மிகவும் அருமையாக
நடித்திருக்கிறார்கள்.

இந்த டெஸ்ட் திரைப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா மற்றும் மீரா ஜாஸ்மின் நடித்துள்ளார்கள்.

கதாநாயகிகளாக நடித்திருக்கும் நயன்தாரா மற்றும் மீரா ஜாஸ்மின் இருவரும் மிக சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

தனது கண்டுபிடிப்பிற்கான அங்கீகாரத்திற்காக போராடும் கதாநாயகன் மாதவன் இறுதி கட்டத்தில் பணத்திற்காக வில்லத்தனத்தை மிரட்டலாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் சித்தார்த், அளவான நடிப்பு மூலம் தனது அழுத்தமான மனநிலையை ரசிகர்களிடத்தில் நேர்த்தியாக கடத்தியிருக்கிறார்.

சொந்த குரலில் பேசி நடித்திருக்கும் கதாநாயகி நயன்தாரா, குழந்தைக்காக ஏங்கும் பெண்களை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் எதார்த்தமாக நடித்திருக்கிறார்.

கதாநாயகன் சித்தார்த்தின் மனைவியாக நடித்திருக்கும் மீரா ஜாஸ்மினும் கதாநாயகன் சித்தார்த்துக்கு ஒரு ஜோடி தேவை என்பதால் திரைப்படத்தில் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

காளி வெங்கட், ஆடுகளம் முருகதாஸ் உள்ளிட்ட சிறு சிறு கதாபாத்திரங்களில்  நடித்திருப்பவர்கள் அருமையான நடிப்பு மூலம் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் விரஜ் சிங் கோஹிலின் ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்தின் தரத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் கிரிக்கெட் போட்டிகளை காட்சிப்படுத்திய விதம், சினிமாத்தனமாக இல்லாமல் நிஜ கிரிக்கெட் போட்டியை பார்க்கும் உணர்வை திரைப்படம் ரசிகர்களுக்கு கொடுத்திருக்கிறார்.

இசையமைப்பாளர் சக்திஸ்ரீ கோபாலனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்களத்திற்கு ஏற்றவாறு மிக அருமையாக பயணித்து இருக்கிறார்.

கிரிக்கெட் போட்டியை களமாக கொண்டு ஈகோவினால் வாழ்க்கையில் விளையாடும் மனிதர்களையும், அவர்கள் சந்திக்கும் சோதனைகளையும் விறுவிறுப்பாக அருமையாகவும் சுவாராஸ்யமாகவும் ஏக்கி இருக்கிறார் இயக்குனர் எஸ்.சஷிகாந்த்.

மொத்தத்தில், இந்த ‘டெஸ்ட் திரைப்படம் அருமையாக உள்ளத பழகவும் உள்ளது..