“அதர்ஸ்” திரைப்பட விமர்சனம்.

நடிகர் & நடிகைகள் :- ஆதித்யா மாதவன், கௌரி கிஷன், அஞ்சு குரியன், நண்டு’ ஜெகன், முண்டாசுப்பட்டி’ ராமதாஸ், ஆர் சுந்தர்ராஜன்,மாலா பார்வதி, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- அபின் ஹரிஹரன்.

ஒளிப்பதிவாளர் :- அரவிந்த் சிங்.

படத்தொகுப்பாளர் :- ராமர்.

இசையமைப்பாளர் :- ஜிப்ரான்.

தயாரிப்பு நிறுவனம் :- கிராண்ட் பிக்சர்ஸ், UP7 வென்ச்சர்ஸ்.

தயாரிப்பாளர்கள் :- கிராண்ட் பிக்சர்ஸ்,

ரேட்டிங் :- 3. 5./5.

சென்னை நெடுஞ்சாலையில் கொள்ளை அடிப்பதற்காக முயற்சியில், நடு சாலையில் ஒரு பாறாங்கல்லை வைக்க எதிர்பாராத விதமாக அந்த சாலையில் வந்த ஒரு வேன் ஒன்று கவிழ்ந்து பெட்ரோல் டேங்க் வெடித்து மிகவும் கோரமான விபத்தில் மூன்று பெண்கள் ஒரு ஆண், மொத்தம் நான்கு பேர் எரிந்து உயிரிழந்து விடுகிறார்கள்.

நெடுஞ்சாலையில் வேன் ஒன்று கவிழ்ந்து பெட்ரோல் டேங்க் வெடித்து கோரமான விபத்தை பற்றிய வழக்கை விசாரிக்கும் பொறுப்பு உதவி ஆணையர் கதாநாயகன் ஆதித்யா மாதவன் ஒப்படைக்கப்படுகிறது.

கோரமான விபத்தில் மூன்று பெண்கள் ஒரு ஆண், எரிந்து உயிரிழந்த நான்கு பேரின் பிரேத பரிசோதனை அறிக்கையில், கதாநாயகன் ஆதித்யா மாதவன் சில முக்கிய தடயங்களை கண்டறிந்து, காணாமல் போன மூன்று பெண்களுக்கும் சிட்டியில் உள்ள அனாதை இல்லங்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கிறார்.

ஆனால், கதாநாயகன் ஆதித்யா மாதவன் இந்த விபத்து திட்டமிட்டு நடத்தப்பட்டதா? இல்லை விபத்தா? என்பதை விசாரணை மூலம் கண்டுபிடித்தாரா? கண்டு பிடிக்கவில்லையா? குற்றவாளிகளை கதாநாயகன் ஆதித்யா மாதவன் கைது செய்தாரா? கைது செய்யவில்லையா? என்பதுதான் அதர்ஸ் திரைப்படத்தின் மீதிக்கதை‌.

இந்த அதர்ஸ் திரைப்படத்தில கதாநாயகனாக புதுமுக நடிகர் ஆதித்யா மாதவன், நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் ஆதித்யா மாதவன், காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் மிகவும் பொருத்தமாக இருந்தது மட்டுமல்லாமல் இவர் புதுமுக நடிகர் என்பது போல் தெரியாமல் மிகவும் கதாப்பத்திரத்தை உணர்ந்து மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.

இந்த அதர்ஸ் திரைப்படத்தில கதாநாயகியாக கௌரி கிஷன் நடித்துள்ளார்.

மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கௌரி கிஷன் மிகவும் அழகாக வந்து மிகவும் உணர்வுப்பூர்வமான நடிப்பால் ரசிகர்கள் கவனத்தை ஈர்க்கிறார்

இந்த அதர்ஸ் திரைப்படத்தில நடித்திருக்கும் அனைத்து காவல்துறை பெண் அதிகாரி அஞ்சு குரியன், வில்லன் நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நண்டு’ ஜெகன், காவல்துறை ஆய்வாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ’ முனிஷ்காந்த் ஆர் சுந்தர்ராஜன்,மாலா பார்வதி, அனைவரும் சிறப்பான நடிப்பை கொடுத்து அசத்தியிருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்திருக்கிறார்.

மெடிக்கல் கிரைம் திரில்லர் பாணியில் திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் அபின் ஹரிஹரன்.

மொத்தத்தில் அதர்ஸ் திரைப்படம் கண்டிப்பாக பார்க்கலாம்.

error: Content is protected !!