‘விஸ்வநாதன் அன்ட் சன்ஸ்’ திரைப்பட விமர்சனம்.

நடிகர் & நடிகைகள் :- சூர்யா, மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன், சுனில் செட்டி, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- வெங்கி அட்லூரி.

ஒளிப்பதிவாளர் :- நிமிஷ் ரவி.

படத்தொகுப்பாளர் :- நவீன் நூலி.

இசையமைப்பாளர் :- ஜி.வி. பிரகாஷ் குமார்.

தயாரிப்பு நிறுவனம் :- சிதாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ்  & ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ்
ஸ்ரீகரா ஸ்டூடியோஸ்.

தயாரிப்பாளர்கள் :- சூர்யதேவர நாக வம்ஷீ & சாய் சௌஜன்யா.

மக்கள் தொடர்பு :- யுவராஜ்.

ரேட்டிங் :-  4/5.

தமிழகத்தில் முன்னணி தொழிலதிபரான கதாநாயகன்  சூர்யா இவர் துப்பாக்கி சுடும் வீரராகவும் இருக்கிறார்.

கதாநாயகன்  சூர்யா ஒலிம்பிக்கில் நடக்கும் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவிற்கு கோல்டு மெடல் பெற்றுக் கொடுக்கிறார்.

கதாநாயகன் சூர்யா திருமணத்தின் மீது எந்த ஒரு அக்கறையும் இல்லாமல் இருக்கிறார்.

தனது மகன் கதாநாயகன் சூர்யாவிற்கு எப்படியாவது திருமணம் செய்து வைத்து பேரன், பேத்தியை பார்க்க தாய் ராதிகா ஆசைப்படுகிறார் 

தன்னுடைய தாயார் ராதிகாவின் விருப்பத்தை நிறைவேற்றவும், தங்கள் குடும்பத்திற்கு வாரிசு வேண்டும் என்ற அடிப்படையில், ஒரு வாடகை தாயின் மூலம் கதாநாயகன் சூர்யாவிற்கு ஒரு மகன் பிறக்கிறார்.

ஒரு சில நாட்களில், குழந்தைக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட குழந்தைக்கு அறுவை சிகிச்சை ஒன்று செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இந்த நிலையில், மருத்துவமனை நிர்வாகம் குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு குழந்தையின் தாய் கண்டிப்பாக இருக்க வேண்டும் என கூறுகின்றனர்.

கதாநாயகன் சூர்யாவின் மகனை பெற்றுக் கொடுத்த வாடகை தாயான கதாநாயகி மமிதா பைஜூவை அழைத்து  வருவதற்காக அமெரிக்கா செல்கிறார்.

அமெரிக்க சென்ற கதாநாயகன் சூர்யா, கதாநாயகி மமிதா பைஜூவிடம் பேசி சம்மதிக்க வைத்து சென்னைக்கு அழைத்து வருகிறார்.

குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தைக்கு அறுவை சிகிச்சை முடிந்த   நிலையில் அதன் பின்னர், ஒரு மாத காலம் கதாநாயகி மமிதா பைஜூ குழந்தையுடன் இருக்கிறார்.

கொஞ்சம் கொஞ்சமாக கதாநாயகி மமிதா பைஜூவிற்கு குழந்தை மீது ஈர்ப்பு வர கதாநாயகன் சூர்யா மீதும் காதல் மலர்கிறது.

இதனால், கதாநாயகி மமிதா பைஜூ கதாநாயகன் சூர்யாவை விட்டு பிரிவதற்கு தயக்கம் காட்டுகிறார்.

கதாநாயகி மமிதா பைஜூவை எப்படியாவது அமெரிக்காவுக்கு திருப்பி அனுப்பி வைப்பதற்கு கதாநாயகன் சூர்யா துடிக்கிறார்.

இந்த நிலையில் கதாநாயகன் சூர்யா கதாநாயகி மமிதா பைஜூ இருவரும் ஒன்று சேர மாட்டார்களா என்று தாய் ராதிகா ஏங்குகிறார்.

கதாநாயகன் சூர்யா கதாநாயகி மமிதா பைஜூ இருவரும் ஒன்று இணைந்தார்களா?  ஒன்றிணைவில்லையா? என்பதுதான் இந்த விஸ்வநாதன் அன்ட் சன்ஸ் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த விஸ்வநாதன் அன்ட் சன்ஸ் திரைப்படத்தில் கதாநாயகனாக சூர்யா நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் சூர்யா நடுத்தர வயது கதாபாத்திரத்தில் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி எமோஷனல் காட்சிகளில் கை தேர்ந்த அனுபவ நடிப்பு மிகப்பெரிய பலம். குடும்ப கதையில் கலக்கிவிட்டார்.

சஞ்சய் விஷ்வநாத் கதாபாத்திரத்தில் சூர்யா தனது வழக்கமான கதாநாயகன் பிம்பத்திலிருந்து விலகி, மிகவும் நிதானமான நடிப்பை வழங்கியிருக்கிறார்.

இந்த விஸ்வநாதன் அன்ட் சன்ஸ் திரைப்படத்தில் கதாநாயகியாக மமிதா பைஜூ நடித்திருக்கிறார்.

கலகலப்பான கதாபாத்திரத்தில் மமிதா பைஜூ காதல் காட்சிகளிலும்
கலக்கிவிட்டார்.

கதாநாயகன் சூர்யாவின் தாய் ராதிகாவிற்க்கு தன்னுடைய மகனுக்கு எப்படியாவது திருமணம் செய்துவிட துடிக்கும் அவரது எண்ணங்கள் கலகலப்பு.

ஓரிரு காட்சிகளே வந்தாலும் ரவீனா டாண்டன் சிறப்பு சேர்க்கிறார்.

சுனில் செய்யும் சிறு சிறு காமெடிகள் ரசிக்க வைக்கிறது.

இதர நடிகர், நடிகைகளும் மிகச் சிறப்பான நடிப்பை  வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவியின் ஒலிப்பதிவு மூலம் திரைப்படத்தின் பிரமாண்டத்தை மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தி இருக்கிறார்.

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது.

ஒரு அழகான குடும்ப கதையில் காதல், நகைச்சுவை, எமோஷனல், சென்டிமென்ட் என அனைத்து அம்சங்களையும் இடம்பெறச் செய்து திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை ரசித்து பார்க்க வைத்துள்ளார் இயக்குனர் வெங்கி அட்லூரி.

மொத்தத்தில், இந்த “விஸ்வநாதன் அன்ட் சன்ஸ்” குடும்பத்துடன் திரையரங்குக்குச் சென்று மனதாரச் சிரித்து, ரசித்து, உணர்வுப்பூர்வமாகப் பார்த்து மகிழக்கூடிய ஒரு பக்கா ஃபேமிலி என்டர்டெய்னர்.

error: Content is protected !!