‘பிளாக் கோல்ட்’ திரைப்பட விமர்சனம்.
நடிகர் & நடிகைகள் :- வெற்றி, பிரியாலயா, லிவிங்ஸ்டன், நிழல்கள் ரவி, அபிராமி வெங்கடாசலம், ஏ. வெங்கடேஷ், ராமர், அருள் டி. சங்கர், சபிதா ராய், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- தீரன் அருண்குமார்.
ஒளிப்பதிவாளர் :- சந்தோஷ் குமார் வீரசாமி.
படத்தொகுப்பாளர் :- தினேஷ் குமார்.
இசையமைப்பாளர் :- கவாஸ்கர் அவினாஷ்.
தயாரிப்பு நிறுவனம் :- எம்.எம். ஸ்டூடியோஸ்.
தயாரிப்பாளர்கள் :- எம். மூர்த்தி, எம். மானஷ்வானி.
மக்கள் தொடர்பு :- சதீஷ் (AIM)
வெளியீட்டு தேதி :- 13 நவம்பர் 2026.
ரேட்டிங் :- 2.5./5.
மனித முடியும் ஒரு வணிகப் பொருள்தான்… ஆனால் அதன் பின்னால் இத்தனை பெரிய மாஃபியா உலகம் இயங்குகிறதா? என்ற வித்தியாசமான கேள்வியுடன் களமிறங்குகிறது பிளாக் கோல்ட்’ திரைப்படம்.
மிகப்பெரிய கார் கம்பெனியில் சீப் மெக்கானிக்காக வேலை பார்த்துக் கொண்டிருக்கும் கதாநாயகன் வெற்றி மற்றும் தந்தை லிவிங்ஸ்டன் லாரி டிரைவராக அன்பான மனைவி, துளசி மகள் என்று வாழ்ந்து வருகிறார்.
கதாநாயகன் வெற்றியின் தந்தை லிவிங்ஸ்டன் உடல்நலம் சரியில்லாமல் இருக்கும் இவரிடம் இவரது முதலாளியான எ.வெங்கடேஷ் உடனடியாக லாரியில் ஐந்து கோடி ரூபாய் விலை மதிப்பு மிக்க உயர்ந்த சரக்கு உடனடியாக ஆந்திராவிற்கு கொண்டு செல்ல வேண்டும் என முதலாளி வெங்கடேஷ் கூறுகிறார் .
தன்னுடைய முதலாளி பேச்சை தட்டாமல் ஐந்து கோடி ரூபாய் விலை மதிப்பு மிக்க உயர்ந்த சரக்கு ஆந்திராவிற்கு
எடுத்துச் செல்கிறார்.
ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள சரக்கு ஏற்றிய லாரி தமிழக எல்லையை தாண்டி ஆந்திரா பார்டரில் செல்லும்போது அங்கே சரக்கு ஏற்றி வந்த இந்த லாரி காணாமல் போகிறது.
சரக்கு ஏற்றி வந்த லாரியின் டிரைவர் லிவிங்ஸ்டன்
என்ன ஆனார் என்று தெரியவில்லை.
சரக்கு ஏற்றி சென்ற லாரியின் முதலாளி ஏ வெங்கடேஷ் டிரைவர் லிவிங்ஸ்டன் தான் சரக்கை எடுத்துக்கொண்டு எஸ்கேப் ஆகிவிட்டார் என்று போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கிறார்.
காவல்துறை அதிகாரியாக அபிராமி இதை விசாரிக்கிறார்.
ஒரு கட்டத்தில் காவல்துறை அதிகாரியின் விசாரணையில் நம்பிக்கை இல்லாத கதாநாயகன் வெற்றி தானே இறங்கி காணாமல் போன தனது தந்தை லிவிங்ஸ்டன் தேடி போகிறார்.
இறுதியில் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள சரக்கு உடன் காணாமல் போன லாரியை கண்டுபிடித்தார்களா? கண்டுபிடிக்கவில்லையா?
கதாநாயகன் வெற்றியின் தந்தை
லிவிங்ஸ்டனை கதாநாயகன் வெற்றி கண்டுபிடித்தார்களா? கண்டுபிடிக்கவில்லையா?
என்பதுதான் இந்த ‘பிளாக் கோல்ட்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ‘பிளாக் கோல்ட்’ திரைப்படத்தில் கதாநாயகனாக வெற்றி நடித்திருக்கிறார்.
கதாநாயகன் நடித்திருக்கும் வெற்றி மிகச் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
இந்த ‘பிளாக் கோல்ட்’ திரைப்படத்தில் கதாநாயகியாக பிரியாலயா நடித்திருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் பிரியாலயா கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்திருக்கிறார்.
கதாநாயகன் வெற்றி தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் லிவிங்ஸ்டன், தாய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் துளசி காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அபிராமி வெங்கடாசலம், வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஏ. வெங்கடேஷ், அருள் டி. சங்கர், நிழல்கள் ரவி அனைவரும் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்..
ஒளிப்பதிவாளர் சந்தோஷ் குமார் வீரசாமி ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்திருக்கிறார்.
இசையமைப்பாளர் கவாஸ்கர் அவினாஷ் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைப்படத்திற்கு சிறப்பாக இசையமைத்துள்ளார்.
பொதுவாகத் திரையில் அதிகம் பேசப்படாத ஒரு தொழிலின் பின்னணியை மையமாகக் கொண்டு கதை அமைத்திருப்பது கவனிக்கத்தக்கது.
இதுவரை அதிகம் பேசப்படாத மனித முடி வணிகத்தின் இருண்ட பக்கத்தைக் கதைக்களமாகக் கொண்டு சிறப்பான திரைக்கதை அமைத்து பெண்களின் தலைமுடிக்குப் பின்னால் இயங்கும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சந்தை, அதன் பின்னணியில் இருக்கும் மாஃபியா கும்பல்கள், பேராசை, போட்டி, துரோகம், வன்முறை என வித்தியாசமான உலகத்தைத் திரையில் கொண்டு இயக்கி இருக்கிறார் இயக்குனர் தீரன் அருண்குமார்.
முத்தத்தில், பிளாக் கோல்ட் – திரைப்படம் தலைமுடிக்குப் பின்னால் மறைந்திருக்கும் இருண்ட உலகம்!












