’டிரெண்டிங்’ திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- கலையரசன், ப்ரியாலயா, பிரேம் குமார், பெசன்ட் ரவி, வித்யா போர்கியா, ஷிவன்யா, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- சிவராஜ்.
ஒளிப்பதிவாளர் :- பிரவீன் பாலு.
படத்தொகுப்பாளர் :- நாகூரான் ராமச்சந்திரன்.
இசையமைப்பாளர் :- சாம் சி.எஸ்.
தயாரிப்பு நிறுவனம் :- ராம் ஃபிலிம் ஃபேக்டரி, ஆனந்த் ஜி பிரசண்ட்ஸ்.
தயாரிப்பாளர் :- மீனாட்சி ஆனந்த்.
ரேட்டிங் :- 2.75./5.
கதாநாயகன் கலையரசன் மற்றும் கதாநாயகி பிரியாலயா இருவரும் கணவர் மனைவியாக இருக்கும் இவர்கள் பெயரில் யூடியுப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்கள்.
சுமார் பல லட்சத்திற்கும் மேல் பின் தொடரும் தங்களுடைய சேனல் மூலம் வரும் வருமானம் மூலம் மிகப்பெரிய அளவில் பங்களா வீடு, கார் பைக் என இருவரும் மிக வசதியாக வாழ்ந்து வருகிறார்கள்.
திடீரென்று ஒரு நாள் இவர்களுடைய யூடியுப் சேனல் டெலிட் ஆகிவிட, வருமானம் இல்லாமல் கடன் பிரச்சனையில் சிக்கி தவிக்கிறார்கள்.
அந்த சமயம், வருமானம் இன்றி கஷ்டப்படும் இவர்களுக்கு தொலைபேசி மூலம் ஒரு மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு நீங்கள் ஒரு ரியாலிட்டி ஷோ நடத்துவதாகவும், அதில் கலந்து கொண்டு வெற்றி பெற்றால் இரண்டு கோடி ரூபாய் பரிசு கிடைக்கும் என கூறுகிறார்.
இந்த ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் நபர்கள் பற்றிய விபரங்களை நீங்கள் யாரிடமும் சொல்லக்கூடாது என உள்ளிட்ட பல விதிமுறைகள் பற்றி கூறுகிறார்.
கதாநாயகன் கலையரசன் மற்றும் கதாநாயகி பிரியாலயா இருவரும் இடையே விளையாடும் இந்த போட்டி அவர்களது இல்லத்தில், ஏழு நாட்கள் விளையாட வேண்டும் என்றும், உங்களுக்கு கொடுக்கப்படும் டாஸ்க்குகளில் நீங்கள் வெற்றி பெற்றால் பரிசுத் தொகை உயர்ந்து கொண்டே இருக்கும் என்றும், நீங்கள் தோல்வியடைந்தால் வெற்றி பெற்ற அனைத்து பரிசுத் தொகையை இழக்க நேரிடும் என்று கூறுகிறார்.
கதாநாயகன் கலையரசன் மற்றும் கதாநாயகி பிரியாலயா இருவருடைய பண தேவையும், மற்றும் கடன் பிரச்சனையில் இருந்து மீள்வதற்காகவும் மர்ம மனிதரின் அந்த ரியாலிட்டி ஷோவில் பங்கேற்கும் கதாநாயகன் கலையரசன் மற்றும் கதாநாயகி பிரியாலயா இருவரும், ஆரம்பத்தில் எளிமையான போட்டிகளில் வென்று சில லட்சங்களை பரிசுத்தொகையாக பெற்றாலும், அடுத்தடுத்த டாஸ்க்குகளில் மூலம் தாங்கள் எதிர்பார்க்காத சிக்கல்களை இருவரும் சந்திக்கிறார்கள்.
கதாநாயகன் கலையரசன் மற்றும் கதாநாயகி பிரியாலயா என்ன மாதிரியான சிக்கலில் சிக்கினார்கள் அதனால் இருவரின் வாழ்க்கையில் எத்தகைய பிரச்சனைகள் உருவெடுக்கிறது? என்பதுதான் இந்த ‘டிரெண்டிங்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ‘டிரெண்டிங்’ திரைப்படத்தில் கதாநாயகனாக கலையரசன் நடித்திருக்கிறார்.
மிகப்பெரிய இடைவெளிக்குப் பிறகு கலையரசன் தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் கதாபாத்திரத்தை மிக சரியாக பயன்படுத்திக் கொண்டு திரைப்படம் பார்க்கும் ரசிகர்களிடம் பாராட்டு பெற்றிருக்கிறார்.
இந்த ‘டிரெண்டிங்’ திரைப்படத்தில் கதாநாயகியாக பிரியாலயா நடித்திருக்கிறார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் கலையரசன் கதாநாயகியாக நடித்திருக்கும் பிரியாலயா இருவரும் முழு திரைப்படத்தை தங்களது கணவன் மனைவி காதலன் காதலி மற்றும் போட்டி பொறாமை அனைத்து விதமான நடிப்பால் தங்களது தோளில் தூக்கி நிறுத்தியிருக்கிறார்கள்.
கதாநாயகன் கலையரசன் மற்றும் நடிகை பிரியாலயா, இந்த திரைப்படத்தில், இருவரும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள்.
சிறு கதாபாத்திரம் என்றாலும் பிரேம் குமாரின், நடிப்பும் திரைக்கதைக்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறார்.
பெசண்ட் நகர் ரவி, வித்யா போர்கியா, ஷிவனயா ஆகியோர் வருகை திரைக்கதையின் திருப்பத்திற்கு மிகப்பெரிய அளவில் உதவி உள்ளது.
ஒளிப்பதிவாளர் பிரவீன் பாலு, ஒளிப்பதிவு மூலம் கதாபாத்திரங்களின் நடிப்பு கவனத்தை ஈர்க்கும் வகையில் காட்சிகளை திரைப்படமாக்கியிருக்கிறார்.
இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள், மற்றும் பின்னணி இசையும் திரைப்படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது.
சமூக ஊடகங்கள் மூலம் பணம் சம்பாதிக்கும் பலர் அதற்காக பல்வேறு யுத்திகளை கையாள்கிறார்கள் என்பதையும் மிக அருமையாக இயக்கியிருக்கிறார் இயக்குநர் சிவராஜ்.
மொத்தத்தில், ‘டிரெண்டிங்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் டிரெண்டிங் ஆகுமா ?











