‘சிக்மா’ திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், சிவ் பண்டிட், அன்பு தாசன், யோக் ஜபீ, மகாலட்சுமி, ஷீலா ராஜ்குமார், கமலேஷ், கிரண் கொண்டா, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- ஜேசன் சஞ்சய்.

ஒளிப்பதிவாளர் :- கிருஷ்ணன் வசந்த்.

படத்தொகுப்பாளர் :- பிரவீன் கே.எல்..

இசையமைப்பாளர் :- எஸ். தமன்.

தயாரிப்பு நிறுவனம் :- லைகா புரொடக்ஷன்ஸ்.
.
தயாரிப்பாளர் :- சுபாஸ்கரன்

மக்கள் தொடர்பு :- சுரேஷ் சந்திரா (D ONE).

வெளியீட்டு தேதி :- 02 அக்டோபர் அக்டோபர்  2026.

ரேட்டிங் :-  3.5./5.

வெளிநாட்டில் உள்ள ஒரு ரகசிய லாக்கரில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் ரூபாய், ஆயிரம் கோடி மதிப்பிலான மாஃபியா கேங் சம்பத் ராஜ், பதுக்கி வைத்திருக்கும்  பணத்துடன் தொடங்குகிறது சிக்மா திரைப்படம்.

ஆந்திராவில் இருக்கும் மாஃபியா கேங் தலைவர் சம்பத் ராஜூக்கு சொந்தமான ரூபாய் .1,000 கோடி மாபியா பணம் வெளிநாட்டு லாக்கரில் பதுக்கி வைத்திருக்கிறார்.

அந்த ஆயிரம் கோடி ரூபாய் உள்ள லாக்கரை திறக்கும் இரண்டு சாவியை தனது நம்பிக்கைக்குரிய ஒருவரிடம் ஒரு சாவியையும் கொடுத்து வைக்கும் நிலையில் மற்றொரு சாவியை சம்பத்ராஜ் தன்னிடம் வைத்திருக்கிறார்.

இன்னொரு புறம் தனது தந்தை வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தனது தாயின் நினைவாக ஒரு நிகழ்வாகத்தை நடத்திக் கொண்டு கடன்  பிரச்சனையில் சிக்கி தவிக்கும் கதாநாயகன் சந்தீப் கிஷன், கையில் வைத்திருக்கும் பணத்தை சூதாட்டத்தில் அதிக அளவில் பணம் சம்பாதிக்கலாம் என நினைத்து கையில் இருக்கும் அனைத்து  பணத்தையும் இழந்து விடுகிறார்.

இந்த நிலையில் ஆயிரம் கோடி ரூபாய் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் லாக்கரின்  மற்றொரு சாவியுடன் கூடிய ஒரு பென்-டிரைவும் கதாநாயகன் சந்தீப் கிஷன், கையில் கிடைக்கிறது.

அந்த பென்-டிரைவில் சூதாட்ட கிளப் உரிமையாளரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைத்துக்கொண்டு  சூதாட்ட கிளப் உரிமையாளரிடம் இருந்து தனக்கு தேவையான பணத்தை கறக்க நினைக்கும் கதாநாயகன் சந்தீப் கிஷனுக்கு, தான் வைத்திருக்கும் அந்த பென்-டிரைவ் விவகாரமான ஒன்று என தெரிய வருகிறது.

அதனைத்தொடர்ந்து பல்வேறு ஆபத்துகள் கதாநாயகன் சந்தீப் கிஷன் எதிர் கொள்ள அந்த பென்-டிரைவில் இருக்கும் விஷயம்தான் என்ன? தன்னை நோக்கி வரும் ஆபத்துகளில் இருந்து கதாநாயகன் சந்தீப் கிஷன் தப்பித்தாரா? தப்பிக்கவில்லையா?  என்பதுதான் இந்த ‘சிக்மா’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ‘சிக்மா’ திரைப்படத்தில் கதாநாயகனாக சந்தீப் கிஷன் நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் சந்தீப் கிஷன் பக்கத்து வீட்டு பையன் போல கலகலப்பான  கதாபாத்திரத்தில் கலக்கி இருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளிலும் அசத்தியுள்ளார்.

இந்த ‘சிக்மா’ திரைப்படத்தில் புதுமுக கதாநாயகியாக பரியா அப்துல்லா நடித்துள்ளார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் பரியா அப்துல்லா கதாநாயகி தேவை என்பதால் ஒரு சில காட்சிகள் வந்தாலும், நடித்த காட்சிகளில் கவனம் ஈர்த்துள்ளார்

கதாநாயகன் சந்தீப் கிஷன் நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அன்புதாசனின் டைமிங் காமெடிகள் ஓரளவு ஆறுதல் டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராஜூ சுந்தரத்தின் நடிப்பு ரசிகர்களை கடுப்பு ஏற்றுகிறது.

சம்பத்ராஜ், ஷிவ் பண்டிட் இன்னும் வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கலாம். ஆனால்  வழக்கம் போல கதாநாயகனை  தவிர அனைவரிடமும் ‘மாஸ்’ காட்டியுள்ளனர்.

ஒளிப்பதிவாளர் கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பிரமாண்டமாக திரைப்படமாக்கியிருக்கிறார்.

இசையமைப்பாளர் எஸ். தமன் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்திருக்கிறார்.

முதல் திரைப்படத்திலேயே ஆக்‌ஷன், நகைச்சுவை, சஸ்பென்ஸ் மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை மூலம் ஒரு கமர்ஷியல் த்ரில்லர்  திரைப்படத்தின் இடைவேளை மற்றும் கிளைமாக்ஸ் பகுதிகள் பரபரப்பை அதிகரித்து மிகவும் சிறப்பாக இயக்கி இருக்கிறார் இயக்குநர் ஜேசன் சஞ்சய்.

மொத்தத்தில், ‘சிக்மா’ திரைப்படம் விறுவிறுப்பான திரைக்கதை, அதிரடி ஆக்‌ஷன், சஸ்பென்ஸ் நிறைந்த கமர்ஷியல் த்ரில்லர்!

error: Content is protected !!