‘ஹிட்லர்’ திரைப்பட விமர்சனம்.

நடிகர் & நடிகைகள் :- விஜய் ஆண்டனி, ரியா சுமன், கௌதம் வாசுதேவ் மேனன், சரண்ராஜ், ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, தமிழ், ஆடுகளம் நரேன், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- தனா எஸ்.ஏ.

ஒளிப்பதிவாளர் :- நவீன் குமார். ஐ.

படத்தொகுப்பாளர் :- சங்கத்தமிழன் இ.

இசையமைப்பாளர் :- விவேக் – மெர்வின்.

தயாரிப்பு நிறுவனம்:- செந்தூர் பிலிம் இண்டர்நேஷனல்.

தயாரிப்பாளர்கள் :- டி.டி.ராஜா, டி.ஆர். சஞ்சய் குமார்.

ரேட்டிங் :- 2.5./5.

மதுரையில் இருந்து வேலைக்காக சென்னைக்கு வரும் கதாநாயகன் விஜய் ஆண்டனி, ரயில் நிலையத்தில் கதாநாயகி ரியா சுமனை பார்த்தவுடன் காதல் கொள்கிறார்.

இவர்கள் இருவரின் காதல் கதை ரயில் பயணத்தில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், அமைச்சரின் ரூபாய்.400 கோடியை கொண்டு செல்லும் அவருடைய ஆட்களை கொலை செய்துவிட்டு அந்த ரூபாய்.400 கோடி பணத்தை மர்ம கும்பல் ஒன்று கொள்ளையடித்து சென்று விடுகிறது.

அந்த 400 கோடி பணத்தை கொள்ளையடித்த அந்த மர்ம கும்பலை பிடிப்பதற்கான காவல்துறை அதிகாரியான கெளதம் வாசுதேவ் மேனனுக்கு பொறுப்பு வழங்கப்பட, விசாரணையில் மிகப்பெரிய அதிர்ச்சிகரமான உண்மை ஒன்று தெரிய வருகிறது.

அந்த ரூபாய் 400 கோடி பணத்தை கொள்ளை அடித்த கொள்ளையர்களை காவல்துறை அதிகாரியான கௌதம் வாசுதேவ் மேனன் கண்டுபிடித்தாரா? கண்டு பிடிக்கவில்லையா?

காவல்துறை அதிகாரியான கௌதம புத்தர் மேன் விசாரணையில் கண்டுபிடித்த அதிர்ச்சிகரமான உண்மை என்ன? என்பதுதான் இந்த ஹிட்லர் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ஹிட்லர் திரைப்படத்தில் கதாநாயகனாக விஜய் ஆண்டனி நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் விஜய் ஆண்டனி தனது கதாபாத்திரத்தை கச்சிதமாக கையாண்டு, காதல் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளில் எந்தவித குறையும் இல்லாமல் தனது ரசிகர்களுக்கு கொடுத்திருக்கிறார்.

இந்த ஹிட்லர் திரைப்படத்தில் கதாநாயகியாக ரியா சுமன் நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் ரியா சுமனுக்கு வழக்கமான கமர்ஷியல் கொடுத்த கதாபத்திரத்தை குறையில்லாமல் மிகச் சிறப்பாக கையாண்டு இருக்கிறார்.

காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கெளதம் வாசுதேவ் மேனன், தனது வழக்கமான பாணியில் தனது கதாபாத்திரத்திற்கு மட்டும் இன்றி திரைக்கதை ஓட்டத்திற்கும் மிகப் பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறார்.

வில்லனாக நடித்திருக்கும் சரண்ராஜ், அவரது தம்பியாக நடித்திருக்கும் தமிழ், ஆடுகளம் நரேன், ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா ஆகியோர் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை எந்தவித குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் நவீன் குமார்.ஐ, காட்சிகளை ஒளிப்பதிவு மூலம் திரைபடத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கிறார்,

இசையமைப்பாளர் விவேக் – மெர்வின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் மிக அருமையாக இருக்கிறது.

மக்கள் பிரச்சனையை கருவாக வைத்துக்கொண்டு கமர்ஷியல் ஆக்‌ஷன் ஜானரில் திரைக்கதை அமைத்து மிக சிறப்பாக இருக்கிறார் இயக்குநர் தனா. எஸ்.ஏ.

மொத்தத்தில், இந்த ‘ஹிட்லர்’ திரைப்படம் தலைப்புக்கு ஏற்றது போல் இல்லை..