‘ஃபிளாக்’ (FLAG) திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- குட்டி தனுஷ் தீஹான், மிக்கி மக்கி ஜா அபினவ் கோசாமி, அனந்த், பப்புஷா, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- எஸ்.பி. பொன்ஷங்கர்.
ஒளிப்பதிவாளர் :- எஸ்.பி. பொன்ஷங்கர்.
படத்தொகுப்பாளர் :- டி. வரதராஜன்.
இசையமைப்பாளர் :- ராஜா ரவிவர்மா, பாலசுப்ரமணியம்.
தயாரிப்பு நிறுவனம் :- ஐ&ஐ மூவிஸ்.
தயாரிப்பாளர் :- . வை.
வைரப்பிரகாஷ்
மக்கள் தொடர்பு :- ஆனந்த் எம் பி.
வெளியீட்டு தேதி :- 20 நவம்பர் 2026.
ரேட்டிங் :- 3.5./5.
சிறுவன் தீஹான், படிப்பில் அதிக ஆர்வமில்லாமல், நண்பர்களுடன் சேர்ந்து விளையாடுவதிலேயே தனது பொழுதைக் கழித்து வருகிறான்.
எதிர்பாராத விதமாக
தாய் தந்தையை விபத்தில் இழந்த சிறுவன் தீஹான் மனதளவில் பெரிதும் பாதிக்கப்படுகிறான்.
பெற்றோர்களை இழந்த தீஹான் எதிர்பாராத அதன்பின் கர்நாடகாவில் வசிக்கும் தனது தாத்தா அழைத்துச் சொல்கிறார்.
அன்புடனும் அரவணைப்புடனும் தீஹானை பார்த்துக்கொள்ளும் தாத்தா, மெல்ல அவனது மனக்காயங்களிலிருந்து மீண்டு வர உதவுகிறார்.
தாத்தா தேசியக் கொடி தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்.
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில், குடியரசு தினத்தன்று தான் பணியாற்றிய தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட தேசியக் கொடி ஏற்றப்படுவதை நேரில் காண வேண்டும் என்பது அவரது நீண்ட நாள் ஆசை. ஆனால் எதிர்பாராத உடல்நலப் பிரச்சினையால் தாதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.
தாத்தாவின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் சிறுவன் தீஹான் மனதில் வலுப்பெறுகிறது.
இந்தியா கேட் எங்கிருக்கிறது என்பது கூடத் தெரியாத அந்தச் சிறுவன், தீஹான் தாத்தா சேமித்து வைத்திருந்த பணத்தை எடுத்துக்கொண்டு தனியாகப் பயணத்தைத் தொடங்குகிறான்.
டெல்லியில் குடியரசு தலைவர் ஏற்றும் தேசிய கொடியை நேரில் பார்க்க வேண்டும் என்பதுதான் தனது தாத்தாவின் லட்சியம் என்று கூறிய நிலையில் தாத்தாவின் லட்சியத்தை நிறைவேற்ற சிறுவன் தீஹான் தனியாக டெல்லி புறப்பட்டு செல்கிறான்.
தனது தாத்தாவின் ஆசையை நிறைவேற்ற சிறுவன் தீஹான் டெல்லியில் குடியரசு தலைவர் ஏற்றும் தேசிய கொடியை நேரில் பார்த்தானா? பார்க்கவில்லையா?
என்பதுதான் இந்த ‘ஃப்ளாக்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ‘ஃப்ளாக்’ திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் மாஸ்டர் தீஹான், நடித்திருக்கிறார்.
வேலு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மாஸ்டர் தீஹான் திரைப்படத்தின் முக்கியமான பலமாகத் திகழ்கிறார்.
சிறுவனுக்கே உரிய கள்ளமில்லாத தன்மை, அறியாமை, அச்சம், தாத்தாவின் மீதான பாசம் எனப் பல உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார்.
குறிப்பாக, வெளி உலகத்தைப் பற்றிய போதிய அறிவில்லாமல் பயணத்தைத் தொடங்கும் சிறுவனாகவும், ஒவ்வொரு புதிய அனுபவத்தின் வழியாக வாழ்க்கையைக் கற்றுக்கொள்ளும் குழந்தையாகவும் அவரது நடிப்பு திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள் கவனம் ஈர்க்கிறது.
தாத்தா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மிக்கி மகிஜா தனது அனுபவம் வாய்ந்த நடிப்பால் கதைக்கு உணர்வுப்பூர்வமான வலிமை சேர்த்துள்ளார்.
பேரனின் மனநிலையைப் புரிந்துகொண்டு அன்புடன் அணுகும் தாத்தாவாக அவரது நடிப்பு திரைப்படத்தின் ஆரம்பப் பகுதிகளுக்கு உயிரூட்டுகிறது.
மற்ற கதாபாத்திரங்களில் படித்திருக்கும் நடிகர் நடிகைகள் அனைவரும் கதையின் பயணத்திற்குத் தேவையான பங்களிப்பை வழங்கியுள்ளன.
ஒளிப்பதிவாளர் எஸ்.பி. பொன்ஷங்கர் ஒளிப்பதிவு மூலம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளின் இயற்கை அழகு, நிலப்பரப்பு, மக்கள் வாழ்க்கை மற்றும் கலாச்சார வேறுபாடுகளைத் திரையில் கொண்டுவந்துள்ள விதம் கவனிக்கத்தக்கது.
இசையமைப்பாளர் ராஜா ரவிவர்மா இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசையும் காட்சியமைப்புகளும் கதையின் உணர்வுகளுக்கு ஆதரவாக அமைந்துள்ளன.
தாய் தந்தை இல்லாமல் ஒரு சிறுவனின் தனிமை, தேடல் மற்றும் பயணத்தின் வழியே அவன் அடையும் மாற்றங்களை, தேவையற்ற வசனங்கள் இன்றி வெறும் காட்சிகளின் மூலமாகவே உணர வைத்திருக்கும் இயக்குநர் எஸ்.பி.பொன்சங்கர்,
மொத்தத்தில், ’ஃப்ளாக்’ நம் நாட்டின் மீதான நம்பிக்கை.












