’3 பி.ஹெச்.கே’ திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- சித்தார்த், சரத் ​​குமார், தேவயானி, யோகி பாபு, மீத்தா ரகுநாத், சைத்ரா, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- ஸ்ரீ கணேஷ்.

ஒளிப்பதிவாளர் :- தினேஷ் கிருஷ்ணன் பி & ஜித்தின் ஸ்டானிஸ்லாஸ்.

படத்தொகுப்பாளர் :- கணேஷ் சிவா.

இசையமைப்பாளர் :-  அம்ரித் ராம்நாத்.

தயாரிப்பு நிறுவனம் :- சாந்தி டாக்கீஸ்.

தயாரிப்பாளர் :- அருண் விஸ்வா.

ரேட்டிங் :- 3.5/5.

ஒரு கம்பெனியில் கணக்காளராக வேலை பார்த்து வரும் தந்தை சரத்குமாருக்கு மனைவி தேவயானி இருவருக்கும் இரண்டு குழந்தைகள் மகன் சித்தார்த், மகள் மீதா என நடுத்தர குடும்பமாக  சென்னையில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்த குடும்பத்திற்கு ஒரே கனவு தாங்களுக்கு சொந்தமாக ஒரு வீடு வாங்க வேண்டும் என்பதுதான் இவர்களுடைய நீண்ட நாள் ஆசையாக உள்ள நிலையில் வீடு வாங்குவதற்காக சிறுக சிறுக பணத்தை சேர்த்து வைக்கின்றனர்.

சரத்குமாரின் மகன் சித்தார்த் காலேஜில் கேட்பதற்காக பணம் தேவைப்படுவதால் வீடு வாங்க வைத்திருந்த திருக சேமித்த பணத்திலிருந்து தனது மகனின் காலேஜிற்கான கட்டணத்தில் செலுத்தி விட ஆனால் எதிர்பாராத விதமாக சரத்குமார் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதற்கான கட்டணத்தையும் செலுத்த  ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு செலவு வந்து கொண்டே இருக்கிறது.

இந்த நிலையில் இவை அனைத்தையும் கடந்து இறுதியில் சரத்குமார் சொந்தமாக இவர்களுக்கு வீடு வாங்கினார்களா? வீடு வாங்கவில்லையா? என்பதுதான் இந்த 3 BHK திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த 3 BHK திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடித்திருக்கிறார்.

முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சரத்குமார் பிரபு என்ற கதாபாத்திரத்தில் மிடில் கிளாஸ் குடும்பத் தலைவனாக அருமையாக  நடித்திருக்கிறார்.

அந்தக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதை விட அந்த கதாபாத்திரமாகவே  வாழ்ந்திருக்கிறார்.

முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சரத்குமார் தன்னுடைய அனுபவ நடிப்பில் பிரபு என்ற  கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து வாழ வைத்திருக்கிறார்.

ஒரு மிடில் கிளாஸ் தந்தை கதாபாத்திரத்தில் சரத்குமார் தனது மகனின் ஆசையை நிறைவேற்ற முடியாத தந்தையாக, தனது மனைவியிடம் கோபப்படும் கணவனாக தன் மகளிடம் பாசமாக இருக்கும் தந்தையாக அனுபவ தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த 3 BHK திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் தேவயானி நடித்திருக்கிறார்.

முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தேவயானிக்கு திரைப்படத்தில் பெரிதாக வசனங்கள் இல்லையென்றாலும் தனது எக்ஸ்பிரஷன் மூலம் ஒவ்வொரு காட்சிகளுக்கும் தன் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார்.

கதாநாயகன் சித்தார்த் ஒரு பள்ளி மற்றும் கல்லூரி மாணவன் வேலைக்கு செல்லும் இளைஞர் என அனைத்து தோற்றங்களுக்கும் அனைத்து விதமான தோற்றங்களிலும் தன்னை அப்படியே பொருத்திக் கொண்டார் என்று சொன்னால் கூட நம்ப முடியும் அந்த அளவிற்கு கதாபாத்திரத்திற்கு சிறப்பு சேர்த்து இருக்கிறார்.

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் சித்தார்த் இரண்டாம் பாதியில் மிகவும் நன்றாகவே படித்திருக்கிறார்.

நடிகர் சரத்குமாரின் மகளாக சித்தார்த்தின் தங்கையாக  குட் நைட் திரைப்படத்தின் மூலம் நமக்கு பரிச்சயமான மீதா மிகவும் அருமையான நடிப்பை கொடுத்துள்ளார்.

தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மீதான திரைப்படத்தில் தனக்கு முக்கிய கதாபாத்திரத்தில் இரண்டாம் பாதியில் வீட்டிற்குள் நடக்கும் ஒரு காட்சியில் கைத்தட்டல்களை பெறுகிறார்.

திரைப்படத்தில் சைத்ராவை கதாநாயகி என்று சொல்ல முடியவில்லை என்றாலும் அந்த கதாபாத்திரத்திற்கு சிறப்பான நடிப்பை கொடுத்து  கனகச்சிதமாக  பொருந்தியுள்ளார்.

மற்றொரு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சைத்ராவும் இரண்டாம் பாதியில் மிக அருமையான நடிப்பை மிகச்சிறப்பாக கொடுத்துள்ளார்.

ஒளிப்பதிவாளர்கள் தினேஷ் கிருஷ்ணன் பி & ஜித்தின் ஸ்டானிஸ்லாஸ் ஒளிப்பதிவு திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்து இருக்கிறது.

இசையமைப்பாளர் அம்ரித் ராம்நாத் இசையில் பாடல்கள் பின்னணி இசை என அனைத்தும் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறார்.

எட்டு தோட்டாக்கள் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்த இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இந்த 3 BHK திரைப்படத்தின் மூலம் மீண்டும் ஒருமுறை கவர்ந்துள்ளார்.

ஒரு குடும்பத்திற்கு ஒரு சொந்த வீடு எவ்வளவு முக்கியம் என்பதை தன்னுடைய அற்புதமான கதை மற்றும் திரைக்கதையில் மூலம் மிக  ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் வாழ்க்கையை இரண்டு மணி நேர திரைப்படமாக மிகச் சிறப்பாக இயக்கியிருக்கிறார் இயக்குநர் ஸ்ரீ கணேஷ்.

மொத்தத்தில் 3BHK திரைப்படம் கண்டிப்பாக  குடும்பத்துடன் சென்று ரசிக்கக்கூடிய ஒரு அழகிய படைப்பு.

error: Content is protected !!