“குமாரசம்பவம்” திரைப்பட விமர்சனம்.
நடிகர் & நடிகைகள் :- குமரன் தங்கராஜன், பாயல் ராதாகிருஷ்ணா, ஜி.எம். குமார், குமாரவேல், பாலா சரவணன், வினோத் சாகர், லிவிங்ஸ்டன், வினோத் முன்னா, சிவா அரவிந்த், கௌதம் சுந்தரராஜன், அர்ஜெய், சார்லஸ் வினோத், விஜய் ஜாஸ்பர், சரவணன், கே.கோபால், டெலிபோன் ராஜ், சக்தி பாலாஜி கிருஷ்ணராஜ், வி.தாரணி, கவிதா, ஷ்ரவன் ராமகிருஷ்ணன், யஷ்வன் ரமேஷ், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- பாலாஜி வேணுகோபால்.
ஒளிப்பதிவாளர் :- ஜெகதீஸ் சுந்தரமூர்த்தி.
படத்தொகுப்பாளர் :- ஜி.மதன்.
இசையமைப்பாளர் :- அச்சு ராஜாமணி
தயாரிப்பு நிறுவனம் :- வீனஸ் இன்ஃபோடெயின்மென்ட்.
தயாரிப்பாளர் :- கே.ஜே.கணேஷ்.
ரேட்டிங் :- 4./5.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் மிகவும் பிரபலமான நெடுந்தொடரான பாண்டியன் ஸ்டோர்ஸ் கதாநாயகனாக நடித்து வரும் குமரன் தங்கராஜன் முதல்முறையாக குமர சம்பவம் என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளி திரையில் கதாநாயகனாக களம் இறங்கி உள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் நெடுந்தொடரில் மிகவும் அமைதியாக சீரியசான கதாபாத்திரத்தில் நடித்த குமரன் தங்கராஜன் வெள்ளித்திரையில் கதாநாயகனாக நடிக்கும் தன்னுடைய முதல் திரைப்படமான ”குமாரசம்பவம்” மூலம் காமெடி கதையில் செப்டம்பர் 12ஆம் தேதி அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் கலக்க வருகிறார்.
தமிழ் திரைப்பட உலகில் இயக்குநராக வேண்டும் என்ற லட்சியத்தில் கதாநாயகன் குமரன் தங்கராஜன் பல தயாரிப்பாளர்களிடம் கதை சொல்லி வருகிறார்.
சின்ன வயதில் தன்னுடைய தந்தையை இழந்த கதாநாயகன் குமரன் தங்கராஜன் எனது தாத்தா, தாய், தங்கையுடன் வசித்து வருகிறார்.
கதாநாயகன் குமரன் தங்கராஜன் வீட்டின் மேல் மாடியில் சமூக போராளியான குமரவேல் வசித்து வருகிறார்.
பல்வேறு சமூக பிரச்சனைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் சமூக போராளி குமரவேல் பல வழக்குத் தொடர்ந்து கொண்டு போராடி கொண்டிருக்கிறார்.
சமூக போராளியான குமரவேல் தொடுக்கும் அனைத்து வழக்குகளில் அதற்கான பின்விளைவுகளை கதாநாயகன் குமரன் தங்கராஜன் எதிர்கொள்கிறார்.
சமூக போராளியான குமரவேல் தொடுக்கும் அனைத்து வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவர் மீதும் கதாநாயகன் குமரன் தங்கராஜனுக்கு அதிகளவில் கோபம் ஏற்படுகிறது.
கதாநாயகன் குமரன் தங்கராஜன் தாத்தா ஜி எம் குமாருக்கு சமூக போராளியான குமரவேல் மீது அதிகளவில் நெருக்கம் காட்டும் காரணத்தினால அவருடைய தாதா வி எம் குமாரை சகித்துக் கொள்கிறார்.
கதாநாயகன் குமரன் தங்கராஜன் பல்வேறு தயாரிப்பாளர்களிடம் கதை சொல்லி எந்த தயாரிப்பாளரும் திரைப்படம் எடுக்காமல் எதுவுமே கைகூடாததால் தன்னுடைய திரைப்படத்தை கதாநாயகன் குமரன் தங்கராஜன் திரைப்படம் சொந்தமாக தயாரிக்க முடிவெடுக்கிறார்.
இந்த நிலையில் தனது தாத்தாவின் வீட்டை விற்க வேண்டும் என கதாநாயகன் குமரன் தங்கராஜன் சொல்கிறார்.
இந்த நிலையில் சமூக போராளியான குமரவேல் மர்மமான முறை கொலை செய்யப்படுகிறார்.
கதாநாயகன் குமரன் தங்கராஜன் வீட்டை விற்று தனது திரைப்படத்தை இயக்கினாரா? திரைப்படத்தை இயக்க வில்லையா? சமூக போராளியான குமரவேலை கொன்றது யார்? கொலையாளியை காவல் துறையினார் கண்டு பிடித்தார்களா? கண்டு பிடிக்கவில்லையா? என்பதுதான் இந்த “குமார சம்பவம்” திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த “குமார சம்பவம்” திரைப்படத்தில் கதாநாயகனாக குமரன் தங்கராஜன் நடித்திருக்கிறார்.
கதாநாயகன் குமரன் தங்கராஜன் மிகவும் இயல்பான நடிப்பால் நகைச்சுவையும் அதே நேரம் கதாநாயகன் இமேஜையும் பேலன்ஸ் செய்திருந்த விதம் பேசுறப்பாக்கம் நடித்து இருக்கிறார்.
இந்த “குமார சம்பவம்” திரைப்படத்தில் கதாநாயகியாக
பாயல் ராதாகிருஷ்ணா, நடித்துள்ளார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் பாயல் ராதாகிருஷ்ணா சிறப்பான நடிப்பை கொடுத்து திரைப்படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.
கதாநாயகன் குமரன் தங்கராஜன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜி.எம்.குமார் சமூக போராளி கதாபாத்திரத்தில் எடுத்திருக்கும் இளங்கோ குமரவேல் எப்போதும் போல் சிறப்பான நடிப்பை கொடுத்து உள்ளார்கள்.
ராட்சசன் முதல் பல திரைப்படங்களில் வில்லனாகவும் டெரரான கதாபாத்திரங்களே நடித்து வந்த நடிகர் வினோத் சாகர் இந்த திரைப்படத்தில் தன்னாலும் நகைச்சுவை பண்ண முடியும் என்பதை நிரூபித்து இருக்கிறார்.
இந்த திரைப்படத்துக்குப் பின் வினோத் சாகரின் காமெடி கதாபாத்திரங்களில் அதிக அளவில் எதிர்பார்க்கலாம்.
பால சரவணன், திரைப்படம் பார்க்கும் ரசிகரை கவனித்து இருக்கிறார்.
இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் தயாரிப்பாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் லிவிங்ஸ்டன், வினோத் முன்னா, சிவா அரவிந்த், வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கௌதம் சுந்தரராஜன், அர்ஜெய், சார்லஸ் வினோத், விஜய் ஜாஸ்பர், சரவணன், கே.கோபால், டெலிபோன் ராஜ், சக்தி பாலாஜி கிருஷ்ணராஜ், வி.தாரணி, கவிதா, ஷ்ரவன் ராமகிருஷ்ணன், யஷ்வன் ரமேஷ், இவர்கள் அனைவரும் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஜெகதீஸ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்திருக்கிறார்.
இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி இசையில் பாடல்கள் மற்றும் கதையின் தன்மையை மீறாத அளவில் பின்னணி இசையும் சிறப்பாக பயணித்திருக்கிறார்.
ஒரு போராளியின் கதையை கையில் எடுத்த இயக்குனர் விறுவிறுப்பும் காமெடி மற்றும் சிறிதளவு ஒரு மெசேஜ் என வழக்கமான ஒரு டெம்பிளேட் திரைப்படம் தான் குமார சம்பவம். இது ஒரு வழக்கமான கதையை கிரேஸி மோகன் பாணியிலான ட்விஸ்டட் நகைச்சுவையால் அதில் புதுமையான காட்சிகளை புகுத்தி கலகலப்பாக இயக்கியிருக்கிறார் பாலாஜி வேணுகோபால்.
மொத்தத்தில் இந்த “குமார் சம்பவம்” திரைப்படம் குடும்பத்துடன் திரையரங்கில் கொண்டாட கூடிய நகைச்சுவை திரைப்படம்.











