மொழி மாறினாலும் நடிப்பு மாறாது – ‘பட்டாஸ்’ நாயகி மெஹ்ரீன்
துரை.செந்தில்குமார் இயக்கத்தில், நடிகர் தனுஷ் தற்போது ‘பட்டாஸ்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இரட்டை வேடத்தில் தனுஷ் நடித்து வரும் இந்த படத்தில் நாயகிகளாக நடிகை சினேகாவும், மெஹ்ரீனும் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த படம் குறித்து நடிகை மெஹ்ரீன் கூறுகையில், அனுபவம் பெற்ற நடிகர்களுடன் நடித்ததில் மகிழ்ச்சி அளிப்பதாகவும், தனுஷிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டதாகவும் கூறினார். மேலும் மொழி மாறினாலும் நடிப்பு மாறாது என்றும், அனைத்து மொழிகளிலும் நடிப்பதும் பிடிக்கும் என்றும் கூறியுள்ளார்.










