800க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிய பாடலாசிரியர் முத்து விஜயன் காலமானார்
தமிழ்த் திரையுலகில் முன்னணி கதாநாயகர்கள் உள்ளிட்ட பலருக்கும் 800-க்கும் அதிகமான பாடல்களை எழுதியவர் பிரபல பாடலாசிரியர் முத்து விஜயன். ‘கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா… மேகமாய் வந்துபோகிறேன்’ போன்ற பாடல்கள் இவர் எழுதியது தான். இந்நிலையில், மஞ்சள் காமாலை நோயினால் கல்லீரல் பாதிக்கப்பட்ட முத்து விஜயன் நேற்று மாலை 4 மணிக்கு காலமானார். சென்னை வளசரவாக்கம் மின் மயானத்தில் இவரது உடல் தகனம் நடைபெற்றது கவிஞர் தேன்மொழியை காதல் திருமணம் செய்து, பிறகு விவாகரத்து பெற்ற முத்துவிஜயன் சமீபகாலமாக தமிழ் திரைப்பட பாடலாசிரியர்கள் சங்கத்தில் தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.











