தயாரிப்பாளர், இயக்குநர் கேயாரின் மனைவி திருமதி இந்திரா காலமானார்.

சென்னை 24 செப்டம்பர் 2021 தயாரிப்பாளர், இயக்குநர் கேயாரின் மனைவி திருமதி இந்திரா காலமானார்.

பிரபல தயாரிப்பாளர், இயக்குநர், விநியோகஸ்தரான திரு கேயாரின் மனைவி திருமதி இந்திரா கேயார்
சிறுநீரக கோளாறு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சிகிச்சை பலனளிக்காமல் இன்று (செப்டம்பர் 24, 2021) மாலை 4.45 மணிக்கு அவர் காலமானார். அவரது வயது 67.

இவர்களுக்கு ஒரு மகனும் 3 மகள்களும் உள்ளனர்

அவரது இறுதி சடங்கு நாளை (செப்டம்பர் 25, 2021) மாலை 4 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெறும்.

முகவரி: பழைய எண் 11, புதிய எண் 14, முதல் பிரதான சாலை, சீதம்மாள் எக்ஸ்டென்ஷன், எஸ் இ ஈ டி கல்லூரி அருகில், தேனாம்பேட்டை, சென்னை.