பிரபல இயக்குநர்நடிகர் தயாரிப்பாளர் மனோபாலா காலமானார்.!

பிரபல இயக்குநர் நடிகர் தயாரிப்பாளர் மனோபாலா காலமானார்.!

சென்னை 04 மே 2023 பிரபல தமிழ் திரைப்பட இயக்குநரும் நடிகருமான மனோபாலா உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு வயது 69.

நடிகரும் இயக்குனரும்  தயாரிப்பாளருமான மனோபாலா. கல்லீரல் பிரச்சனை காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய மனோபாலா கடந்த 15 நாட்களாக அவர் வீட்டில் ஓய்வு எடுத்து வந்த நிலையில்  சென்னை வடபழனியில் இருக்கும் அவரது வீட்டில் நேற்று (மே 3, 2023) பிற்பகல் 12.55 மணி  அளவில் காலமானார்.

தமிழ் திரைப்பட உலகின் மூத்த இயக்குநர்களின் ஒருவரான இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் உதவி இயக்குநராக பணியாற்றியவர் மனோபாலா. 1982-ஆம் வருடம் ஆகாய கங்கை திரைப்படத்தின் மூலம் தமிழ் தமிழ் திரைப்பட துறையில் இயக்குநராக அறிமுகம் ஆனார்.

தமிழில் கிட்டத்தட்ட 700 திரைப்படங்களுக்கு மேலாக குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

இவர் சமீபத்தில் யூ டியூப் மூலம் உலகிலும் கலக்கி வந்தார்.

மனோபாலாவின் மனைவி பெயர் உஷா, மகன் பெயர் ஹரீஷ் ஆகும். மனோபாலாவின் இல்ல முகவரி: B/1, ஶ்ரீபிரியா ஃபிளாட்ஸ், எல் வி பிரசாத் லேப் சாலை (வாட்டர்ஃபால்
ரெஸ்டாரன்ட் முன்பாக), சாலிகிராமம், சென்னை.

இயக்குநர் நடிகர் மனோபாலா மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டபல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழ் திரைப்பட பிரபலங்கள் பலரும் அவரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அன்னாரது இறுதி ஊர்வலம் இன்று (மே 4) காலை 10:30 மணிக்கு மேல் அவரது இல்லத்தில் இருந்து புறப்பட்டு வளசரவாக்கம் மயானத்தில் இறுதி சடங்குகள் நடைபெறும்.