தளபதி விஜய் வீட்டில் வருமான வரி சோதனை பற்றி நடிகை குஷ்பு டுவீட்.

இந்நிலையில், ‘பிகில்’ திரைப்படம் மற்றும் ‘மாஸ்டர்’ திரைபபடங்களுக்கு நடிகர் விஜய் பெற்ற சம்பளம் தொடர்பான வருமான வரி சோதனை விசாரணையின் மூலம் தெரியவந்தது.

‘பிகில்’ திரைப்படத்திற்கு
ரூபாய்.50 கோடியும் ‘மாஸ்டர்’ திரைப்படத்திற்கு ரூபாய்.80 கோடியும் சம்பளமாக நடிகர் விஜய்க்கு வழங்கப்பட்டுள்ளது.

வருமான வரித்துறை அதிகாரிகளின்
விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் நடிகர் விஜயின் சம்பளம் தொடர்பாகவும் வருமானவரி சோதனை தொடர்பாகவும் நடிகை குஷ்பு, அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், “விசாரணை முடிந்தது; நடிகர் விஜயின் சம்பள விபரங்களை வருமானவரித்துறை வெளியிட்டது. #பிகில் படத்திற்கு ரூபாய்.50 கோடி, #மாஸ்டர் திரைப்படத்திற்கு ரூபாய்.80 கோடியை நடிகர் விஜய்க்கு சம்பளமாகப் பெற்றுள்ளார்.

இரண்டு திரைப்பட வருவாய்க்கும் விஜய் முறையாக வரி செலுத்தியுள்ளர். Can we rest the case now ?” எனக் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் விஜய்க்கு ஆதரவாக நடிகை குஷ்பு அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

error: Content is protected !!