இதற்கு முன் OTT-யில் பல திரைப்படங்கள் வெளியிட்ட நிலையில் நடிகர் சூர்யாவை மட்டும் எதிர்ப்பது ஏன்?

நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரிக்கும் நடிகை ஜோதிகா கதாநாயகியாக நடித்துள்ள திரைப்படம்தான் ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடாமல் நேரடியாக இணையத்தில் வெளியிட உள்ளனர்.

கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு முடிந்தாலும் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகள் திறக்க இன்னும் ஓரிரு மாதங்கள் கண்டிப்பாக ஆகும்.

மேலும் மற்ற நாடுகளில் திரையரங்குகள் திறக்க இன்னும் 6 மாதங்கள் கூட ஆகலாம் என தெரிகிறது.

அதுவரை முடிந்த திரைப்படத்தை வெளியிட முடியாமல் இருந்தால் தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே தனது தயாரிப்பில் உருவான ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தை பல எதிர்ப்புகளை மீறியும் இணையத்தில் வெளியிட உள்ளனர்.

இதற்கு முன் வேறு திரைப்படங்கள் இணையத்தில் வெளியாகவில்லையா? என்ற கேள்வி உங்களுக்கு கண்டிப்பாக எழலாம்.

நிறைய திரைப்படங்கள் ரிலீஸாகியுள்ளதே. அப்படியென்றால் நடிகர் சூர்யாவுக்கு மட்டும் ஏன் இந்த எதிர்ப்பு என்பதுதானே உங்கள் அடுத்த கேள்வி..?

நடிகர் சூர்யா தயாரித்து நடித்து வரும் சூரரைப் போற்று திரைப்படமும் இதுபோல் நேரிடையாக இணையத்தில் வெளியானால் திரையரங்குகளின் நிலை என்னாவது? என்பதுதான் இந்த எதிர்ப்புக்கு காரணம் என கூறப்படுகிறது.

காரணம் நடிகர் சூர்யா ஒரு முன்னணி நடிகர். அவரின் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியானால் திரையரங்குகளுக்கு லாபம் கிடைக்கும்.

ஒருவேளை புது முயற்சியாக நடிகர் சூர்யா OTT (இணையத்தில்) திரைப்படத்தை வெளியிட்டால் அவரை தொடர்ந்து பல முன்னணி தயாரிப்பாளர்களும்
பல முன்னணி கதாநாயகர்கள் இந்த நிலையை தொடர வாய்ப்புள்ளது.

இதனால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளும் ஒரேடியாக மூடும் நிலை உருவாகலாம் என்ற பயமும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு ஏற்பட்டிருக்கலாம்.

எனவே இந்த விவகாரத்தில் நடிகர் சூர்யா இந்த நிலையில் என்ன் முடிவுகள் எடுக்க போகிறார்? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதற்கு முன் நேரிடையாக இணையத்தில் வெளியான திரைப்படங்கள் எவை..?

நடிகர் பிரகாஷ்ராஜ் நடித்த ‘சில சமயங்களில்’ திரைப்படம் 2018ல் நெட்பிளிக்சில் வெளியானது.

இயக்குனர் வெங்கட் பிரபுவின் ‘ஆர்கே நகர்’ என்ற திரைப்படம் 2019ல் நெட்பிளிக்ஸில் வெளியானது.

2019ம் ஆண்டு ஜீ 5 இணையத்தளத்தில் ‘சிகை, களவு, இக்லூ’ ஆகிய திரைப்படங்கள் வெளியானது.

இந்த திரைப்படங்களுக்கு எல்லாம் எந்தவித எதிர்ப்பையும் தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் உரிமையாளர் எந்த ஒரு எதிர்ப்பும் காட்டவில்லை என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

இவை ஒரு புறம் இருந்தாலும் டாப் கதாநாயகர்கள் திரைப்படங்களை மட்டுமே OTT வெளியிட நிறுவனங்கள் காத்திருக்கிறது.

சின்ன பட்ஜெட் உருவான திரைப்படங்களை யாரும் கண்டுக்கொள்ள மாட்டார்கள்.

அப்படியிருக்கையில் திரையரங்குகள் முற்றிலுமாக தயாரிப்பாளர்களால் புறக்கணிக்கவும் முடியாது என்பதே நிதர்சனமான உண்மை.

இதற்கு முன் பல திரைப்படங்கள் OTT இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கெல்லாம் திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

நடிகர் சூர்யாவிற்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் திரையரங்குகள் உரிமையாளர்
என தெரியவில்லை.

error: Content is protected !!