OTT-யில் வெளியாகும் நடிகை நயன்தாராவின் மூன்று திரைப்படங்கள்.

சென்னை 02 ஜூன் 2021

OTT-யில் வெளியாகும் நடிகை நயன்தாராவின் மூன்று திரைப்படங்கள்.

தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை நயன்தாரா தனது கைவசம் உள்ள மூன்று திரைப்படங்களை நேரடியாக OTT-யில் வெளியிட உள்ளதாக செய்திகள் பரவி வருகிறது.

கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் திரையரங்குகள் மூடப்பட்டு உள்ளதால் புதிய திரைப்படங்களை OTT-யில் வெளியிட தயாரிப்பாளர்கள் மூம்மரம் காட்டி வருகிறார்கள்.

இதை போல் ஏற்கனவே சூர்யா நடித்த சூரரைப் போற்று, ஜெயம் ரவி நடித்த பூமி, ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷ் நடித்த பென்குயின், விஜய் சேதுபதி நடித்த க.பெ.ரணசிங்கம், வைபவ் நடித்த லாக்கப், வரலட்சுமி சரத்குமார் நடித்த டேனி, திரிஷா நடித்த பரமபதம் விளையாட்டு உள்ளிட்ட பல திரைப்படங்கள் OTT-யில் வெளிவந்துள்ளன.

தற்போது நரகாசுரன், வாழ், எப்.ஐ.ஆர் ஆகிய திரைப்படங்களையும் OTT-க்கு கொடுக்க முயற்சி நடந்து வருகிறது.

இந்த நிலையில் நடிகை நயன்தாராவின் மூன்று திரைப்படங்கள் OTT-யில் வெளி வருவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே நடிகை நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் படம் OTT-யில் வந்தது.

தற்போது அவரது நடிகை நயன்தாரா நடித்த நெற்றிக்கண், ராக்கி, கூழாங்கல் ஆகிய திரைப்படங்களை வாங்கி வெளியிட OTT தளங்கள் அணுகி இருப்பதாக தகவல் பரவி வருகிறது.

இதில் நெற்றிக்கண் திரைப்படத்தில் நயன்தாராவே நடித்து இருக்கிறார்.

ராக்கி திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையை விலைக்கு வாங்கி இருக்கிறார்.

கூழாங்கல் திரைப்படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து தயாரித்துள்ளார்.

விரைவில் இந்த திரைப்படங்களின் OTT- யில் வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது…

error: Content is protected !!