பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமாரின் இரண்டு திரைப்படங்கள் நேரடியாக ஓ.டி.டி.யில் வெளியாகிறது

சென்னை 24 மே 2021

பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமாரின் இரண்டு திரைப்படங்கள் நேரடியாக ஓ.டி.டி.யில் வெளியாகிறது.

கொரோனா வைரஸ் நோய் தொற்றின் காரணமாக ஊரடங்கால் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் திரையரங்குகள் திறக்கப்படாததால் திரைக்கு வர தயாராக இருந்த புதிய திரைப்படங்களை ஓ.டி.டி.யில் வெளியிட்டு வருகிறார்கள்.

முன்னணி கதாநாயகர்கள் திரைப்படங்களும் ஓ.டி.டி.யில் வருகின்றன.

இந்த நிலையில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமார் நடித்துள்ள ‘பெல்பாட்டம்’ இந்தி படமும் ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளது.

1980-களில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்த திரைப்படம் தயாராகி உள்ளது.

இயக்குனர் ரஞ்சித் எம்.திவாரி இயக்கி உள்ளார்.

கியூமா குரோஷி, வாணி கபூர், லாரா தத்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

‘பெல்பாட்டம்’ திரைப்படத்தை தியேட்டரில் வெளியிட முடிவு செய்து இருந்தனர்.

ஆனால் கொரோனா 2-வது அலை மிகவும் தீவிரமாக பரவி வருவதால் ஓ.டி.டி.யில் வெளி வருகிறது.

இதேபோல் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடிப்பில் நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் உள்ள ‘சூர்யவன்சி’ திரைப்படமும் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட உள்ளது.

இந்த திரைப்படத்தை இயக்குநர் ரோகித் ஷெட்டி இயக்கி உள்ளார்.

இதில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாருக்கு ஜோடியாக கத்ரீனா கைப் நடித்துள்ளார்.

ஏற்கனவே இயக்குநர் ராகவலாரன்ஸ் இயக்கத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமார் நடித்து இருந்த காஞ்சனா திரைப்படத்தின் இந்தி மொழிமாற்றம் செய்யப்பட்ட லட்சுமி படமும் ஓ.டி.டி.யில் வெளியானது குறிப்பிடத்தக்கது..

error: Content is protected !!