மார்க் ஆண்டனி திரைப்படத்தின் சென்சார் சர்டிபிகேட்டுக்காக லஞ்சம்.. லீக்கான மேனேஜர் ஹரி கிருஷ்ணா ஆடியோ, நடிகர் விஷால் வெளியிட்ட வீடியோ!!

மார்க் ஆண்டனி திரைப்படத்தின் சென்சார் சர்டிபிகேட்டுக்காக லஞ்சம்.. லீக்கான மேனேஜர் ஹரி கிருஷ்ணா ஆடியோ, நடிகர் விஷால் வெளியிட்ட வீடியோ!!

சென்னை 29 செப்டம்பர் 2023 மார்க் ஆண்டனி திரைப்படத்தின் சென்சார் சர்டிபிகேட்டுக்காக லஞ்சம் வாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால்.

இவரது நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் மார்க் ஆண்டனி.

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்த இந்த திரைப்படம் 100 கோடி ரூபாய் மேல் வசூலை தாண்டி சாதனை படைத்துள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் வெளியானதை தொடர்ந்து இந்த திரைப்படம் சமீபத்தில் இந்தியில் வெளியானது.

இந்த திரைப்படத்தை இந்தியில் வெளியிடுவதற்கு சென்சார் போர்டு சர்டிபிகேட்டுக்காக விண்ணப்பித்த நிலையில் மும்பையை சேர்ந்த சென்சார் போர்டு அதிகாரிகள் 6.5 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஷால் மேனேஜர் ஹரி கிருஷ்ணா மற்றும் சென்சார் போர்டை சேர்ந்த ஒருவரும் பேசிய ஆடியோ இணையத்தில் லீக்காகி உள்ளது‌.

இந்த ஆடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மகாராட்டிரா முதல்வர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு கோரிக்கை வைத்து விஷால் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

என்னுடைய கரியரில் இப்படியொரு மோசமான சம்பவத்தை சந்தித்தது இல்லை என நொந்துக் கொண்டுள்ளார்.

error: Content is protected !!