தனது காதலி புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட நடிகர் ராணா டகுபதி.
தமிழ் தெலுங்கு மொழிகளில் பிரபல நடிகராக வலம் வரும் நடிகர் ராணா டகுபதி
தன்னுடைய காதலி புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.
பிரபல தெலுங்கு திரைப்பட உலகில் பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் பாபுவின் மகனான ராணா டகுபதி கடந்த 2010ஆம் ஆண்டு ‘லீடர்’ என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
முதல் திரைப்படத்திலேயே சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம் பேர் விருது இவருக்கு கிடைத்தது.
தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ராணா டகுபதி
பாகுபலி திரைப்படம் மூலம் தமிழ் திரைப்பட உலகில் உள்ள ரசிகர்களை அதிகளவு கவர்ந்தார்.
மேலும் அஜித்குமாருடன் ஆரம்பம் திரைப்படத்தில் நடிகர் ராணா டகுபதி நடித்திருந்தார்.
இந்நிலையில் நடிகர் ராணா டகுபதி தான் காதலிக்கும் பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.
தன்னுடைய காதலுக்கு இவர் ஓகே சொல்லி இருப்பதாக கூறி காதலி மிஹீகா உடன் இருக்கும் புகைப்படத்தை சமுக வலைதளங்களில் பதிவு செய்திருக்கிறார் நடிகர் ராணா டகுபதி.
தனது காதலியான மிஹீகா ஐதராபாத்தை சேர்ந்தவர். இன்டீரியர் டிசைனிங் படித்தவர். நடிகர் ராணா டகுபதி – மிஹீகா காதலுக்கு பலரும் வாழ்த்துக்களை சொல்லி வருகிறார்கள்.
இவர்களுக்கு இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகிறது.
And she said Yes 🙂 ❤️ pic.twitter.com/iu1GZxhTeN
— Rana Daggubati (@RanaDaggubati) May 12, 2020
Related Tags :
ராண | மிஹீகா | Rana | Miheeka











