நடிகர் ராணா டகுபதி மற்றும் வெங்கடேஷ் டகுபதி நடிப்பில்,  Netflix வழங்கும் “ராணா நாயுடு” இணைய தொடர் ! 

சென்னை 22 செப்டம்பர் 2021 நடிகர் ராணா டகுபதி மற்றும் வெங்கடேஷ் டகுபதி நடிப்பில்,  Netflix வழங்கும்ராணா நாயுடுஇணைய தொடர்

Ray Donovan திரைத் தொடரிலிருந்து தழுவப்பட்ட  இந்திய தொடரில், இரண்டு சூப்பர்ஸ்டார்கள் முதல் முறையாக இணைகிறார்கள் ~

செப்டம்பர் 22, 2021 : பாலிவுட் பிரபலங்களின் போன் புக்கில் முதல் ஆளாக யார் இருக்கிறார்கள் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

அதற்கான பதில் Netflix ல்  உள்ளதுராணா நாயுடு   அவரால் சரிசெய்ய முடியாத பிரச்சனை என்று எதுவுமே இல்லை.

இரண்டு சூப்பர்ஸ்டார்கள், சக்திமிக்க அதிரடி ஆக்சன் கதை மற்றும் Netflix, இது தான்  ரசிகர்களின் ஏக்கத்தை  பூர்த்தி செய்யும் தாரக மந்திரம்.

இந்த விருந்தில் இன்னும் சில ஆச்சர்யங்கள் சேர்க்கும் வகையில், பாகுபலி பல்வாள் தேவனாகிய ராணா டகுபதியும், அவரது மாமாவும், சூப்பர்ஸ்டாருமாகிய வெங்கடேஷ் டகுபதியும் திரையில் முதல் முறையாக,  Netflix  உடைய கிரைம் டிராமா தொடரான ராணா நாயுடு இணைய தொடரில் ஒன்றாக இணைந்து, தோன்றவுள்ளார்கள்.ராணா நாயுடு தொடரை Locomotive Global Inc நிறுவனம் தயாரிக்கிறது.

அமெரிக்காவில் மிகவும்  பிரபலமான  SHOWTIME® கிரைம் தொடரான  “Ray Donovan”  தொடரின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக உருவாகும், இத்தொடரின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது

இந்த தொடர் பாலிவுட் பணக்கார உலகில், எந்த பிரச்சனையையும் சரி செய்யும்பிக்ஸராக வலம் வரும், ரணா நாயுடுவின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகிறது

இந்த தொடரின் அதிகாரப்பூர்வ உரிமையை ViacomCBS Global Distribution Group பெற்றுள்ளது. தொடரின் ஒருங்கிணைப்பாளராகவும் (showrunner), இயக்குநராகவும்  கரண் அன்ஷுமான் செயல்படவுள்ளார், இணை இயக்குநராக  சுபர்ன் வர்மா இத்தொடரை இயக்கவுள்ளார்

இந்தத் தொடரைப் பற்றி, ராணா டகுபதி கூறுகையில் , “இத்தொடர் எனக்கு பல சிறப்பான முதல் தருணங்களை தந்துள்ளது . Netflix உடைய  நீண்ட கதை சொல்லல் பாணியில், என் மாமா வெங்கடேஷ்

உடன் முதல் முறையாக பணிபுரிவது, எங்கள் வாழ்க்கையில் நாங்கள் இருவரும், இதுவரை  செய்ததிலிருந்து  முற்றிலும் மாறுபட்டது. இந்த வகை கதை சொல்லல் பாணியில், வித்தகர்களாக திகழும்ஒரு குழு மற்றும் ஒரு தளத்துடன் இணைந்து இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது மிகவும் புதிய அனுபவமாகவும், சவாலானதாகவும் இருக்கும்நிச்சயமாக மகிழ்ச்சியான அனுபவங்கள் கொண்டிருக்கும். இத்தொடரின் படப்பிடிப்புக்காக ஆவலுடன்  காத்திருக்கிறேன் என்றார்

வெங்கடேஷ் டகுபதி கூறியதாவது

ராணா வுடன் இணைந்து பணிபுரிவதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளேன் , நாங்கள் இருவரும் இணைந்து பணிபுரியும் ஓர் அற்புதமான படைப்பாக இந்த தொடர்  அமையும், நான் Ray Donovan  தொடரின் மிகத்தீவிர ரசிகன்நானும் எங்களது குழுவும் இந்த ரீமேக்கில் அந்த தொடருக்கான நியாயத்தை தர, அனைத்து பணிகளையும்  சிறப்பாக செய்வோம் என்றார்

மோனிகா செர்கில், VP, Content, Netflix India  கூறியதாவது

ராணா டகுபதி மற்றும் வெங்கடேஷ் டகுபதி என்கிற  இரண்டு திறமைமிகுந்த பெரிய நடிகர்களை,  Netflix  மூலம் ஒரு தொடரில்  முதல் முறையாக  இணைத்தது மிகப்பெரும் மகிழ்ச்சி. உலகளாவிய புகழ்பெற்ற தொடரின் அற்புதமான  இந்திய தழுவலாக ராணா நாயுடு இரு சூப்பர்ஸ்டார்களின் கூடணியில்  ரசிகர்களை மிகப்பெரிய அளவில் ஆச்சர்யப்படுத்தும்

ரோக்சானே போம்பா, Vice President, Formats at ViacomCBS Global Distribution Group கூறியதாவது 

சுந்தர் ஆரோன் உடைய  Locomotive Global Inc. மற்றும்  NETFLIX  உடன் இணைந்து உலகளாவிய புகழ் கொண்ட Ray Donovan தொடரை, இந்திய சந்தைக்காக ராணா நாயுடு தொடராக உருவாக்குவது எங்களுக்கு மிகப்பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. இத்தொடரில் கதைக்களங்களின் தழுவல் மற்றும் கதாபாத்திரங்களின் மாற்றம் உள்ளூர் நிலப்பரப்பு மற்றும் கலாச்சாரத்திற்கு எவ்வளவு நன்றாக பொருந்துகின்றன என்பதைப் பார்ப்பது மிகப்பெரும் ஆச்சர்ய்ததை அளிக்கிறது

Locomotive Global Inc சார்பில் சுந்தர் ஆரோன் கூறியதாவது… 

ராணா நாயுடுரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்  மிகச்சிறந்த திரில்லர் தொடராக இருக்கும். இத்தகைய மிகப்பிரமாண்ட படைப்பை Netflix மற்றும் எங்கள் உயர்தர நடிகர்கள், தொடர் ஒருங்க்கிணைப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பு குழு ஆகியவற்றுடன் இணைந்து வழங்க்குவது LGI க்கு கிடைத்த மிகப்பெரும் பாக்கியம் மற்றும் எங்களுக்கான மிகப்பெரிய பொறுப்பு ஆகும்.  

Credits:

நடிகர்கள்  | ராணா டகுபதி, வெங்கடேஷ் டகுபதி

Showrunner | கரண் அன்ஷுமன்

இயக்குனர்கள் | கரண் அன்ஷுமன், சுபர்ன் வர்மா

தயாரிப்பாளர்கள்   | சுந்தர் ஆரோன் (Locomotive Global Media LLP), CBS/Showtime

Locomotive Global Media LLP பற்றி:

 சுந்தர் ஆரோன் மற்றும் ஸ்காட் ஆரோன் ஆகிய இருவரால் 2013 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட நிறுவனம் தான் Locomotive Global Inc. (LGI). LGI ஒரு அமெரிக்க நிறுவனமாகும், இது பல ஊடக நிறுவன சொத்துக்களை  வைத்திருக்கிறது. முதன்மையாக அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் முதன்மையாக  இயங்கி வருகிறது. முதன்மையாக இந்திய சந்தை மற்றும் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்காக   உலகளாவிய தரமான தொலைக்காட்சி மற்றும் திரைப்பட உள்ளடக்கத்தை உருவாக்குதல், தயாரித்தல் மற்றும் விநியோகிப்பதில் இந்நிறுவனம் கவனம்  செலுத்தி வருகிறது. அதன் இந்தியா சார்ந்த துணை நிறுவனம் மூலம் Locomotive Global Media LLP (LGM), LGI இந்திய ஊடகத்திற்கான வணிகத்தை செய்து வருகிறது. சிறந்த திரைக்கதையில் உருவாக்கப்பட்ட தொடர்கள் மற்றும் மிகச்சிறப்பான திரைப்படங்கள் இந்நிறுவனத்தில் உள்ளது. LGI நிறுவனம் TV மற்றும்  OTT க்காக கதைகளை தொடர்கள் திரைப்படங்களை விற்பனை செய்வதுடன் விநியோகம் செய்யும் நிறுவனமாகவும் செயல்பட்டு வருகிறது.  LGI இந்தியாவின் முக்கிய ஒளிபரப்பு நிறுவனங்களுக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விநியோகித்துள்ளது  Star TV, HBO மற்றும் Zee Television Networks ஆகிய முன்னணி நிறுவனங்களுக்கு விநியோகப்பணிகளை செய்துள்ளது. பல வெளிநாட்டு நிறுவங்களுடனும் இணைந்து செயல்பட்டு வருகிறது. எடுத்துக்காட்டாக Lakeshore Entertainment, Screen Media, NBCU மற்றும்  ITV நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.  LGI  விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட  CBS Studios International உடைய உலகளவில் புகழ்பெற்ற தொடரான Ray Donovan தொடரின் அதிகாரப்பூர்வமான ரீமேக் உரிமையை 2019 ல் பெற்றது. LGI  மும்பை இந்தியா மற்றும் லாஸ் ஏஞ்சலீஸ், கலிஃபோர்னியா ஆகிய இடங்களை தலைமையகமாக கொண்டு இயங்கி வருகிறது

ViacomCBS Global Distribution Group குறித்து

ViacomCBS Global Distribution Group உலகத்தின் பல மீடியா தளங்களில் தரமான கதைகளை விநியோகம் செய்யும் முன்னணி நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் உலகின் மிகச்சிறந்த முன்னணி நிறுவன பிராண்டுகளை கொண்டுள்ளது திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்களுடன் Paramount Pictures, Paramount Television Studios, Paramount Players, Paramount Animation, CBS Studios, CBS Media Ventures, CBS News, SHOWTIME Networks, Nickelodeon, MTV Entertainment Group மற்றும்  Miramax நிறுவனங்களை இணைத்து செயல்படுகிறது. உலகளாவிய வகையில், மிகப்பெரும் எண்ணிக்கையிலான திரைப்படங்கள் மற்றும்  இணைய தொடர்கள் கொண்டு இந்நிறுவனம இயங்கிவருகிறது எடுத்துக்காட்டாக உலகளவில் புகழ்பெற்ற “CSI: Crime Scene Investigation,” “NCIS,” “Star Trek,” “SpongeBob SquarePants,” “Transformers,” “Mission: Impossible,” போன்றவற்றை தன்னகத்தே கொண்டுள்ளது. மேலும் இந்நிறுவனம் உலகளவில் தயாரிப்புகளுக்கான திரைக்கதை வடிவம்அல்லது எழுதப்படாத வடிவங்களின் தயாரிப்பு உரிமையை கொண்டுள்ளது

ViacomCBS Global Distribution Group என்பது  ViacomCBS Inc உடைய ஒரு பிரிவாகும்

Netflix பற்றி

Netflix நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனமானது உலகில் முன்ணனி இணைய ஸ்ட்ரீமிங்க் தளமாகும். 209 மில்லியன் சந்தாதாரர்களுடன் உலகின் 190 நாடுகளில், பல்வேறு மொழிகளில், பலவிதமான வகைகளில் திரைப்படங்கள் இணைய தொடர்கள், டாக்குமென்ட்ரிகள்  ஆகியவற்றை வழங்கி வருகிறது. இதன் சந்தாதாரர்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், இணைய இணைப்பு இருந்தால் எவ்வளவு கதைகளை வேண்டுமானாலும் பார்க்க முடியும். சந்தாதாரர்கள் படததை  நிறுத்தி, ஃபார்வேட் செய்துஎந்த விளம்பரங்கள் இல்லாமல் தங்கள் விருப்பப்படி பார்க்க முடியும்

ஊடக தொடர்புக்கு :

ஸ்வேதா பூஜாரி

[email protected]

பங்தி பட்

[email protected]

error: Content is protected !!