நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலைக்கு தூண்டியதாக நடிகர் சல்மான் கான்.உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் ஓரிரு ஆண்டுகளுக்கு முன் வெளியாகி மிக பெரிய வெற்றி பெற்றது..
கேப்டன் மகேந்திர சிங் தோனி கதாபாத்திரத்தில் மிக சிறப்பான நடிப்பை கொடுத்தவர் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்.
இந்நிலையில் இவர் சில தினங்களுக்கு முன் மன அழுத்தம் காரணமாக
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள அவரது வீட்டில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இவருடைய மரணம் பாலிவுட் திரையுலகில் மிக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் திரைப்பட உலகில் உள்ள உச்சத்தில் இருக்கும் வாரிசு அரசியல், அதிகார துஷ்பிரயோகம் இவையே முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
மேலும் பாலிவுட் திரைப்பட உலகில் பின்புலம் இல்லாமல் பாலிவுட் திரைப்பட உலகிற்கு வருபவர்களை பிரபலங்களின் வாரிசுகள் நடத்தும் விதம் என பல்வேறு பிரச்சினைகளை தற்போது கிளப்பியுள்ளது.
இதனையடுத்து வழக்கறிஞர் சுதீர் குமார் ஓஜா என்பவர் பீகார் மாநிலம் முஷாபர்பூர் நீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான், கரண் ஜோஹர், சஞ்சய் லீலா பண்சாலி, ஏக்தா கபூர் உள்ளிட்ட 8 பேர் மீது நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தை தற்கொலைக்கு தூண்டியதாக குறிப்பிட்டுள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் உள்ளிட்டோர் கொடுத்த மன அழுத்தம் காரணமாக சுமார் ஏழு திரைப்படங்களில் இருந்து நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
திரைப்பட வாய்ப்பு இல்லாமல் மன உளைச்சலில் இருந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் வழக்கறிஞர் வழக்கறிஞர் சுதீர் குமார் ஓஜா
குற்றம் சாட்டியிருக்கிறார்.
எனவே பிரபல நடிகர் சல்மான் கான் தயாரிப்பாளர் கரண் ஜோகர், இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி, ஏக்தா கபூர்
உள்ளிட்ட 8 பேர் மீது சட்டப்பிரிவு 306, 109, 504, 506 உள்ளிட்ட 4 பிரிவுகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் சுதீர் குமார் ஓஜா தெரிவித்துள்ளார்.
இதனிடையில் திரைப்பட வாய்ப்புகள் வரவிடாமல் தனது திரைப்பயணத்தை நாசமாக்கியது பிரபல நடிகர் சல்மான் கான் தான் என தபாங் பட இயக்குநர் அபினவ் சிங் காஷ்யப் குற்றம் சாட்டியிருப்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.
I have filed a case against 8 people including Karan Johar, Sanjay Leela Bhansali, Salman Khan & Ekta Kapoor under Sections 306, 109, 504 & 506 of IPC in connection with actor Sushant Singh Rajput's suicide case in a court in Muzaffarpur, Bihar: Advocate Sudhir Kumar Ojha pic.twitter.com/9jNdqvXVKr
— ANI (@ANI) June 17, 2020











