திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் ஐந்து நடிகர்களுக்கு ரெட் கார்டு விதிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.!!

திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழுவில் ஐந்து நடிகர்களுக்கு ரெட் கார்டு விதிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.!!

சென்னை 19 ஜூன் 2023 தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் 18.06.2023 காலை சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.

இந்த பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதில் பல்வேறு விஷயங்களுக்கு பொதுக்குழு உறுப்பினர்களிடம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் ஒப்புதல் பெற்றனர்.

திரைபடம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களை  அவமதித்தும் குளறுபடி செய்யும் நடிகர்களுக்கு இனி தயாரிப்பாளர்கள் சங்கம் ஒத்துழைப்பு வழங்காது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தயாரிப்பாளர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு படப்பிடிப்பு, மற்றும் டப்பிங் பணிகளுக்கு தொடர்ந்து பிரச்சனை செய்து வரும் ஐந்து நடிகர்களை வைத்து திரைப்படம் துவங்குவதற்கு முன்பு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை தொடர்பு கொண்ட ஆலோசனை செய்த பின்பு  ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்காத சிலம்பரசன் டிஆர், விஷால், எஸ்.ஜே.சூர்யா, அதர்வா, யோகி பாபு ஆகிய ஐந்து நடிகர்கள்  மீது ரெட் கார்ட் வழங்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தகவல்.

அதில் தயாரிப்பாளர்களிடம் சம்பளம் பெற்றுக் கொண்டும் கால்ஷீட் தராமல் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாத டப்பிங் பணிகளை முடித்து தராமல் காலம் கடத்தி வரும் நடிகர்கள், தயாரிப்பாளர்களை நஷ்டப்படுத்தி வரும் நடிகர்கள் என பல தரப்பில் பட்டியல் எடுத்து, அந்த நடிகர்களின் திரைப்படங்களுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஒத்துழைப்பு வழங்குவதில்லை (Red Card) என முடிவெடுத்துள்ளனர்.

error: Content is protected !!