பெப்சி திரைப்பட தொழிலாளர்களுக்கு நிதி உதவி வழங்கி உள்ளார் நடிகர் அஜித்குமார்.
சென்னை 15 மே 2021
பெப்சி திரைப்பட தொழிலாளர்களுக்கு நிதி உதவி வழங்கி உள்ளார் நடிகர் அஜித்குமார்.
தமிழ் திராவிட உலகில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் அஜித்குமார் பெப்சி திரைப்பட தொழிலாளர்களுக்கு நிதி உதவி வழங்கி உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்றின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது.
இதனை கட்டுப்படுத்த மத்திய அரசும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக சின்னத்திரை மற்றும் திரைப்பட படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
ஆகையால் தமிழ் திரைப்பட தொழிலாளர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
அவர்களுக்காக தமிழ் திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் ( பெப்சிக்கு ) ரூபாய் .10 லட்சம் நிதி வழங்கியிருக்கிறார் நடிகர் அஜித்குமார்.
இதை திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் ( பெப்சி ) தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார்.
ஏற்கனவே நடிகர் அஜித்குமார் கொரோனா தடுப்பு பணிகளுக்கு தமிழக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.