பிரதமர் நிதிக்கு தமிழக முதல்வர் நிதிக்கு நிதியுதவி வழங்கி இருக்கிறார் நடிகை பார்வதி நாயர்.!
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு இந்தியாவிலும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்த கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுக்க நமது மத்திய அரசும் மாநில அரசும் பலவிதமான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நிவாரண நிதிக்கு ஒரு லட்சம், ரூபாயை மத்திய அரசுக்கு நிதியுதவி வழங்கி இருக்கிறார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நிவாரண நிதிக்கு ஒரு லட்சம் ரூபாயை நிதியுதவி அளித்துள்ளார்.
இந்த நிலையில், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவான தல அஜித்குமார் நடித்த ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகிற்கு அறிமுகமாகி, ’கோடிட்ட இடங்களை நிரப்புக’, ‘என் கிட்ட மோதாதே’ ஆகிய உள்ளிட்ட பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்த இருக்கிறார்.
நடிகை பார்வதி நாயர், தற்போது, தமிழில் வைபவ் ஜோடியாக ஆலம்பனா’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
நடிகை பார்வதி நாயர், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய தென்னிந்திய மொழித் திரைப்படங்கள் அனைத்திலும் நடிப்பதோடு, வெப் சீரிஸ்களிலும் நடித்து தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.











