கலைப்புலி எஸ தாணுவின் அழைப்புகளை ஏற்காத நடிகர் தனுஷ்: நானே வருவேன் வெளியாகும் திரையரங்குகள் அனைத்தும் வெறிச்சோடி கிடக்கிறது.!!

சென்னை 28 செப்டம்பர் 2022 கலைப்புலி எஸ தாணுவின் அழைப்புகளை ஏற்காத நடிகர் தனுஷ்: நானே வருவேன் வெளியாகும் திரையரங்குகள் அனைத்தும் வெறிச்சோடி கிடக்கிறது.!!

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் “நானே வருவேன்” திரைப்படம் நாளை வெளி வருகிறது.

இந்த “நானே வருவேன்” திரைப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

இந்த “நானே வருவேன்” திரைப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரித்திருக்கிறார்.

இந்த “நானே வருவேன்” திரைப்படத்தில், தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.

நடிகர் தனுஷ் இயக்குனர் இயக்குனர் செல்வராகவன் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மூவர் கூட்டணி
எப்பொழுதுமே வெற்றி கூட்டணி தான்

இந்த வெற்றி கூட்டணி உருவாகியுள்ள நானே வருவேன் சந்தோஷத்தில் இருந்த ரசிகர்கள் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு குறைவாகவே இருக்கிறது.

அடிக்கடி, சர்ச்சையில் இந்தத் திரைப்படம் சிக்கிவந்தது அனைவரும் அறிந்தது தான்.

நடிகர் தனுஷ் இநத திரைப்படத்தின் இயக்கத்தில் தலையிடுகிறார் என்று பல தகவல்கள் வெளியான போதும் அந்த குற்றச்சாட்டுகளை படக்குழுவினர் கண்டுகொள்ளவில்லை.

தயாரிப்பாளர் கலைப்புலி.S.தாணுவின் அழைப்புகளை ஏற்காத நடிகர் தனுஷ்,

இதுவரை, “நானே வருவேன்” திரைப்படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் இசை வெளியீட்டு விழா என எதுவும் நடத்தப்படவில்லை.

என்பது சற்று ஆச்சர்யமான விஷயமாக தான் உள்ளது.

இது குறித்து தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணுவிடம் சிலர் கேட்டபொழுது எனது அழைப்புக்களை நடிகர் தனுஷ் ஏற்கவில்லை! என்று வருத்தம் தெரிவித்ததாக கோடம்பாக்கம் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

மேலும், இந்த தேதியில் தான் “நானே வருவேன்” திரைப்படம் வெளியிட்டு செய்யவேண்டும் என கலைப்புலி ஏஸ் தாணுவிடம் நடிகர் தனுஷ் அழுத்தம் தந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறாததற்கு காரணம் என்னவாக இருக்கும்?!

சில மாதங்களுக்கு முன்பு நடிகர் தனுஷ் தன் மனைவியை பிரிந்து விட்டதாக அறிவித்தார்.

அன்று முதல் பத்திரிகையாளர்களை சந்திக்க அச்சம் படுகிறார் நடிகர் தனுஷ் என்று சினிமா வட்டாரங்களில் பரவலாக பேச்சு அடிபடுகிறது.

அது மட்டுமின்றி, சன் பிக்சர்ஸ் நிறுவனம் நடத்திய “திருச்சிற்றம்பலம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு பத்திரிகையாளர்கள் யாரையும் அழைக்க கூடாது என்று நடிகர் தனுஷ் கேட்டுக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஆமை வேகத்தில் செய்யப்பட்ட ப்ரமோஷன்கள்,

நானே வருவேன் திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில், எவ்வித விளம்பரங்களும் இல்லாதது திரைப்படத்தின் வரவேற்பை மந்தமடைய செய்யும் என்பதை கலைப்புலி.S.தாணு அவர்கள் நன்கு அறிந்தபோதும் அவர் ப்ரோமோஷன் செய்யாமல் இருப்பது இநத நானே வருவேன் திரைப்படத்தின் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டாரோ? என்ற கேள்வியை எழுப்புகிறது.

காலியாக இருக்கும் திரையரங்குகள்

நடிகர் தனுஷ் திரைப்படம் என்றாலே அமோக வரவேற்புள்ள போதும் இந்த திரைப்படத்தின் முன்பதிவு மிக மோசமான நிலையில் உள்ளது.

திரையரங்குகள் அனைத்தும் வெறிச்சோடி கிடக்கிறது.

190 திரையரங்கில் மட்டுமே வெளியாகும் இந்த நானே வருவேன் திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெறாவிட்டால் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணுவின் தயாரிப்பில் மோசமான தோல்வியை தழுவிய முதல் திரைப்படமாக இருக்கும் என்பது உண்மை.

மேலும், பொன்னியின் செல்வன் – 1 வெளியாகும் சமயத்தில் இந்த திரைப்படத்தையும் வெளியிடுவது சரியல்ல என்பது அனைவரின் கருத்தாகவும் உள்ளது.

நடிகர் விஜய் நடித்த ‘சச்சின்’ திரைப்படம் நன்றாக ஓடி இருக்க வேண்டிய திரைப்படம்.

ஆனால், ‘சந்திரமுகி’யுடன் வெளியானதால் சச்சின் திரைப்படம் தடம் தெரியாமல் போனது.

அதேபோலதான் விஜய் நடித்த ‘துப்பாக்கி’யுடன் ‘போடா போடி’ திரைப்படம் வெளியானதால் அந்தத் திரைப்படமும் தோல்வி தழுவியது.

அந்த வரிசையில் நானே வருவேன் திரைப்படமும் இணைந்து விடுமோ என்ற எண்ணம் ரசிகர்களிடையேயும் இருக்கிறது.

error: Content is protected !!