“சர்தார்“ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் நடிகர் கார்த்தி அறிவிப்பு ரசிகர்கள் உற்சாகம்!!!
சென்னை 25 அக்டோபர் 2022 “சர்தார்” திரைப்படத்தின் இரண்டாம் பாகம் நடிகர் கார்த்தி அறிவிப்பு ரசிகர்கள் உற்சாகம்!!!
தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் கார்த்தி.
இந்த 2022ஆம் வருடம் அவரது திரைத்துறையில் பொன்னான காலமாக அமைந்திருக்கிறது.
இநத 2022ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் விருமன் திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி ஆகிய மொழிகளில் வெற்றி பெற்றுள்ளது.
தீபாவளி பண்டிகை முன்னிட்டு ‘சர்தார்’ திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளன.
இயக்குனர் பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் திரைப்படத்தின் மிக பிரமாண்டமான வெற்றியை தொடர்ந்து இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக, சர்தார் திரைப்படத்தின் வெற்றிவிழா பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகர் கார்த்தி அறிவித்துள்ளார்.
இந்த 2022ஆம் வருடம் ஆகஸ்ட் மாதத்தில் வெளிவந்த முத்தையா இயக்கத்தில் விருமன் திரைப்படத்தில் கரடுமுரடான கிராமத்து இளைஞர் கதாபாத்திரத்தில் மிக அருமையாக நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் நடிகர் கார்த்தி.
தமிழ் திரைப்பட உலகில் நீண்ட காலமாக கனவு திரைப்படமாக, இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் பாகம் 1 திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரமான வந்தியதேவன் கதாபாத்திரத்தில் அப்படியே ராஜா காலத்து ஒற்றனாக ரசிகர்கள் மனதை கவர்ந்தார்.
இதைத்தொடர்ந்து தீபாவளி கொண்டாட்டமாக வெளியான சர்தார் திரைப்படத்தில் தந்தை, மகன் என இரட்டை வேடங்களில் உளவாளி கதாப்பாத்திரத்தில் காவல்துறை ஆய்வாளர் கதாபாத்திரத்திலும் நடித்து திரைப்பட ரசிகர்களின் நெஞ்சை கொள்ளை கொண்டுள்ளார்.
மாறுபட்ட நல்ல கதைக்களம், விதவிதமான கதாப்பாத்திரங்கள் என ஒவ்வொரு திரைப்படத்திலும் அசத்தி வருகிறார் நடிகர் கார்த்தி.
நடிகர் கார்த்தி திரைப்படம் என்றால் நம்பி திரையரங்களுக்கு குடும்பத்தோடு செல்லலாம் எனும் கருத்தை மக்கள் மனதில் அழுத்தமாக பதிய வைத்து, தனக்கென தனியொரு இடத்தையும் மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தையும் பிடித்துள்ளார்.
தீபாவளிக்கு வெளியான சர்தார் திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து ‘சர்தார்’ பேச்சாகவே இருந்து வருகிறது.
இந்த சர்தார் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக அறிவித்துள்ளார் நடிகர் கார்த்தி.
அதிகாரப்பூர்வமாக வெளியான அறிவிப்பையடுத்து ரசிகர்கள் இந்த செய்தியினை கொண்டாடி வருகின்றனர்.
சர்தார் திரைப்படத்தின் வெற்றி விழாவில், தயாரிப்பாளர் பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லக்ஷ்மன்குமார், இயக்குனர் பி.எஸ்.மித்ரன், ரெட் ஜயண்ட் முவிஸ செண்பக மூர்த்தி, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி.வில்லியம்ஸ், எடிட்டர் ரூபன், கலை இயக்குநர் கதிர், ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன், வசனகர்த்தா பொன் பார்த்திபன், சிறப்பு ஒப்பனையாளர் பட்டணம் ரஷீத் அனைவரும் வெற்றி விழாவில் கலந்து கொண்டனர்.











