அந்தகன்’ திரைப்படத்திற்கு மாபெரும் எதிர்பார்ப்பு இருப்பதால்   திரையரங்குகள் அதிகரித்து வருகிறது !!

‘அந்தகன்’ திரைப்படத்திற்கு மாபெரும் எதிர்பார்ப்பு இருப்பதால்   திரையரங்குகள் அதிகரித்து வருகிறது !!

இந்தி திரைப்பட உலகில் அக்டோபர் 05 2018ஆம் ஆண்டு வெளியாகி இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ‘அந்தாதூன்’ திரைப்படத்தின் தமிழில் மொழிமாற்றம் செய்து ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளிவர இருக்கும் அந்தகன் திரைப்படத்தில் கதாநாயகனாக டாப் ஸ்டார் பிரஷாந்த் நடிப்பில் உருவாகியுள்ள இந்த அந்தகன் திரைப்படத்தை இயக்குனர் நடிகர் தியாகராஜன் மிக பிரமாண்டமாக இயக்கி தயாரித்திருக்கிறார்.

நடிகைகள் சிம்ரன், பிரியா ஆனந்த், ஊர்வசி, வனிதா
விஜயகுமார், லீலா சாம்சன், லட்சுமி பிரதீப், ரேகா சுரேஷ, செம்மலர், கவிதா. நடிகர்கள் சமுத்திரக்கனி, யோகிபாபு,
கே.எஸ்.ரவிக்குமார், பூவையார், மனோபாலா, பெசன்ட் நகர் ரவி, மோகன் வைத்தியா,
உள்ளிட்ட முன்னணி நடிகர் நடிகைகள் நடித்திருக்கிறார்கள்.

இந்த அந்தகன் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

வரும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் ‘அந்தகன்’ திரைப்படம் மிக பிரமாண்டமாக வெளி வருகிறது.

மேலும், இந்த அந்தகன் திரைப்படத்தின் புரோமோஷன் பணிகளில் நடிகர் பிரஷாந்த், நடிகைகள் சிம்ரன், பிரியா ஆனந்த் ஆகியோர் பரபரப்பாக ஈடுபட்டு வருவதால், இணையதளம், மற்றும் சோசியல் மீடியா உள்ளிட்ட அனைத்து ஊடகங்களிலும் அந்தகன் திரைப்படத்தை பற்றிய செய்திகள் மற்றும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

இந்த அந்தகன் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் சுமார் 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகும் ‘அந்தகன்’ ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற ஊர்களிலும் மிகப்பெரிய அளவில் வெளியாக உள்ளது.

அந்தகன் திரைப்படத்தின் மீது திரைப்பட ரசிகர்கள் டாப் ஸ்டார் பிரசாந்த் ரசிகர்கள் மற்றும் ரசிகைகள் மத்தியில் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்து வருவதால் தமிழகத்தில் திரையரங்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

error: Content is protected !!