அனைத்து மொழிகளிலும் இநத வீரமே வாகை சூடும் திரைப்படத்திற்கு திரையரங்குகள் கூட்டம் இல்லையாம் இந்த திரைப்படமும் தோல்வி வரிசையில் இணைந்துள்ளது.
சென்னை 11 பிப்ரவரி 2022
அனைத்து மொழிகளிலும் இநத வீரமே வாகை சூடும் திரைப்படத்திற்கு திரையரங்குகள் கூட்டம் இல்லையாம் இந்த திரைப்படமும் தோல்வி வரிசையில் இணைந்துள்ளது.
.
தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் விஷால்.
ஆனால் இவரது சமீபத்திய திரைப்படங்களின் ரிசல்ட் இவரை பின்னணிக்கு கொண்டு போகும் வகையில் உள்ளது.
விஷால் பிலிம் ஃபேக்டரி சார்பில் தயாரித்து விஷால் நடிப்பில் வெளியான வீரமே வாகை சூடும் திரைப்படம் கடந்த வாரம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்த திரைப்படம் பிப்ரவரி 4ல் திரையரங்குகளில் வெளியானது.
பலமுறை இந்த திரைப்படத்தின் வெளியிட்டு தேதி மாற்றி மாற்றி அறிவிக்கப்பட்டது.
2022 ஜனவரி பொங்கல் அன்று வெளியாகும் என அறிவித்தனர்.
பின்னர் தெலுங்கில் மட்டும் வெளியாகும் என அறிவித்தனர்.
அதன்பின்னர் குடியரசு தினமான ஜனவரி 26ல் வெளியாகும் என அறிவித்தனர்.
இதனால் விஷால் ரசிகர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது.
ஆனால் பிப்ரவரி 4ஆம் தேதி வெளியானது.
மேலும் வீரமே வாகை சூடும் திரைப்படத்திற்கு போதுமான விளம்பரங்களும் இல்லை. இதுவும் திரைப்படத்திற்கு பெரும் பின்னடைவானது.
இந்த திரைப்படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன.
இதனால் திரையரங்குகளில் கூட்டமே இல்லை.
சரி தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் இந்த நிலை என்றால்…
தெலுங்கு, கன்னட மாநிலங்களிலும் இநத திரைப்படத்திற்கு கூட்டம் இல்லவே இல்லையாம்.
இத்துடன் ஆந்திரா, தெலுங்கானாவில் திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான ஆக்சன், சக்ரா, அயோக்கியா, எனிமி என எந்த திரைப்படமும் பெரிய வெற்றியை பெறவில்லை.
அந்த திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு கணிசமான நஷ்டத்தை ஏற்படுத்தின.
இந்த நிலையில் ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படமும் தோல்வி வரிசையில் இணைந்துள்ளது.
மண்ணை கவ்வியது நடிகர் விஷால் நடிப்பில் ‘வீரமே வாகை சூடும்’.திரைப்படம்
இனியாவது நடிகர் விஷால் விழித்துக் கொள்வாரா..??











