நடிகை நயன்தாராவுக்கு காதலன் கொடுத்த பிறந்தநாள் பரிசு.

சென்னை : 18 நவம்பர் 2020

நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவர் விக்னேஷ் சிவன்.

தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவன் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.

அவருடைய கம்பெனி பெயர் அவர் முதல் திரைப்படத்தின் ரவுடி பிக்சர்ஸ் என்று பெயர் சூட்டி உள்ளார் அவரது கம்பெனி சார்பில் இயக்குநர் விக்னேஷ் சிவன் தயாரிக்கும் முதல் திரைப்படம் ‘நெற்றிக்கண்’ அவரின் காதலியான நயன்தாராதான் இந்த திரைப்படத்தின் கதாநாயகி. ‘அவள்’ திரைப்படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இந்த திரைப்படத்தை இயக்குகிறார்.

இன்று நயன்தாராவின் பிறந்தநாள் என்பதால், அவருக்கு பிறந்தநாள் பரிசாக ‘நெற்றிக்கண்’ திரைப்படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார்.

இயக்குநர் விக்னேஷ் சிவன். கண் பார்வையற்ற பெண்ணாக நடித்துள்ள நயன்தாரா, ஒரு குட்டிக் கதை சொல்வது போல் அமைந்துள்ள இந்த டீசர், ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

திரில்லர் படமான இதில் அஜ்மல் வில்லனாக நடித்துள்ளார்.

கார்த்திக் கணேஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தை அடுத்தாண்டு வெளியிட உள்ளனர்.

 

error: Content is protected !!