விக்ரம் திரை விமர்சனம் ரேட்டிங் 4.25 / 5

நடிகர் நடிகைகள் :- கமல ஹாசன், சூர்யா. ஃபஹத் பாசில், விஜய் சேதுபதி, காளிதாஸ் ஜெயராம், நரேன், காயத்ரி, ஆண்டனி வர்கீஸ், ஷிவானி நாராயணன், செம்பன் வினோத் ஜோஸ், நந்தினி மைனா, மகேஸ்வரி, மற்றும் பலர்.

இயக்கம் :- லோகேஷ் கனகராஜ்.

ஒளிப்பதிவு :- கிரீஸ் கங்காதரன்.

படத்தொகுப்பு :- பிலோமின் ராஜ்.

இசை :- அனிருத் ரவிச்சந்திரன்.

தயாரிப்பு :- ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்.

ரேட்டிங் :- 4.25 / 5.

விக்ரம் 1986-ஆம் வருடம் ஆரம்பிக்கப்பட்ட கதை அதன் வாசம் இல்லாமல் புதுமைக்குள் நுழைய முடியாது.

ஸ்ரீஹரிகோட்டாவுக்கு எடுத்துச் செல்லப்படும் ‘அக்னி புத்ரா’ என்ற ஏவுகணையை, மீட்கப் போராடிய கதாநாயகனே விக்ரம்.

ஏவுகணை ரிஸர்ச், 1986-லிலே கணினி என அப்போதைய காலத்திலே வருங்காலத்தை காண்பித்தவர் உலக நாயகன் கமல் ஹாசன்

பாஷை தெரியாத சலாமியா நாட்டில் விக்ரம் செய்யும் ஒவ்வொரு செயலும் சூப்பர்.

பாலைவனப் பிரதேசத்துக்கு உலக நாயகன் கமல்ஹாசன் பயணித்து அற்புத சாகசங்கள் பல புரிந்து ஏவுகணையை மீட்டு வந்ததே 1986-ஆம் ஆண்டு வெளிவந்த விக்ரம் திரைப்படத்தின் கதை.

1986ஆம வருடம் வெளிவந்த ‘விக்ரம்’ திரைப்படத்தையும் 2019ஆம் வருடம் வெளிவந்த ‘கைதி’ திரைப்படத்தையும் வைத்து அந்த இரண்டு திரைப்படங்களின் தொடர்ச்சியாக 2022ல் ‘விக்ரம்’ என்ற வியப்பான ஒரு திரைப்படத்தை இயக்க முடியுமா என வியக்க வைத்திருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

தமிழ் திரைப்பட உலகில் இதுவரை வந்த திரைப்படங்களில் இறுதி காட்சியில் தான் திரைப்படத்தின் கதாநாயகனை அல்லது வில்லனை சாகடிப்பார்கள்.

ஆனால் இந்த விக்ரம் திரைப்படத்தில் திரைப்படத்தின் கதாநாயகன் உலக நாயகன் கமல்ஹாசனை திரைப்படம் தொடங்கியவுடன் கொடூரமாகக் கொன்றுவிட்டு அதன் பிறகு திரைப்படத்தை ஆரம்பிக்கிறார்கள்.

மாநகரம், கைதி, மாஸ்டர்’ என த்ரில்லர் கலந்த ஆக்ஷன் கதைகளைக் கொடுத்து தனக்கென தனி பாணியை உருவாக்கியவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

இந்த ‘விக்ரம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகில் தனது , தடத்தை மிக மிக அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

இந்த விக்ரம் திரைப்படத்தை உலக நாயகன் கமல்ஹாசன் திரைப்படம் என்று கூறுவதை விட இயக்குனர் லோகேஷ் கனகராஜின் திரைப்படம் என்று தாராளமாகச் சொல்லலாம். அதை உலக நாயகனும் ஏற்றுக் கொள்வார்.

காவல் துறையில் இருக்கும் முக்கியமான காவல் அதிகாரிகளான ஹரிஷ் பெரடி, காளிதாஸ் ஜெயராம் மற்றும் கதாநாயகன் கமல்ஹாசனையும் முகமூடி அணிந்த கும்பல் ஒன்று கொடுரமாக கொலை செய்கிறார்கள்.

Read Also  தேவராட்டம் - திரை விமர்சனம்

காவல் துறை அதிகாரிகள் கொலைகளைப் பற்றி விசாரிக்க அன்டர்கவர் வேலை செய்யும் பகத் பாசிலை அழைத்து
முகமூடி மனிதர்களை கண்டுபிடிக்கும் வேலையை ஒப்படைக்கிறார்கள்.

முகமூடி மனிதர்கள் பற்றிய விவரங்களை சேகரிக்கும் வேலையை ஆரம்பிக்கும்போது பகத் பாசிலுக்கு பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கிறது.

காவல்துறை அதிகாரி செம்பன் வினோத் ஜோஸ். அந்த காவல்துறை அதிகாரிகள் கொலைகளுக்கு பின்னணியில் இரண்டு லட்சம் கோடி மதிப்புள்ள போதைப் பொருளின் மூலப் பொருள் இருக்கிறது என்பதையும் அதன் பின்னணியில் மிக பெரிய கும்பல் இருக்கிறது என்பதையும் கண்டுபிடிக்கிறார் பகத் பாசில்.

இறுதியில் பகத் பாசில், மாஸ்க் மனிதர்களை கண்டுபிடித்தாரா? கமலை மாஸ்க் மனிதர்கள் கொலை செய்ய காரணம் என்ன?
முகமூடி அணிந்து கொலை செய்பவர்களை அவர் நெருங்கிய போது அவருக்கு அதிர்ச்சி ஒன்று காத்திருக்கிறது. அது என்ன ?, அடுத்து என்ன ?
மாஸ்க் மனிதர்கள் காவல் துறையினரை கொலை செய்வதற்கு காரணம் என்ன? என்பதுதான் இந்த விக்ரம் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த விக்ரம்
திரைப்படத்தில் கதாநாயகனாக உலக நாயகன் கமல்ஹாசன் நடித்திருக்கிறார்.

கதாநாயகன் உலக நாயகன் கமல்ஹாசன் முதல் பாதியில் கர்ணனாகவும், இரண்டாம் பாதியில் விக்ரமாகவும் நடித்திருக்கிறார்.

கதாநாயகன்
உலக நாயகன் கமல்ஹாசனுக்கு 67 வயதைக் கடந்து விட்டார் எந்த ஒரு இடத்திலும் கூறவே முடியாது.

தனது வயதுக்குரிய கதாபாத்திரத்தைத் தேர்வு செய்திருந்தாலும் அவரு எனர்ஜி வேற லெவல்.

குடிகாரனாகவும், தனது மகனை நினைத்து கவலைப்படும் பாசமான தந்தையாகவும்.

பேரனை நினைத்து ஏங்கும் தாத்தா என நடிப்பில் பளிச்சிடுகிறார் கதாநாயகன் உலக நாயகன் கமல்ஹாசன்.

அதுபோல், நடனம், ஆக்ஷன், என திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார்.

கதாநாயகன் உலக நாயகன் கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக பலருடைய கவனத்தை ஈர்த்து இருக்கிறார் பகத் பாசில்.

திரைப்படத்தில்
முதல் பாதி முழுவதும் திரைக்கதையை தனது வசப்படுத்தி கொள்கிறார் பகத் பாசில்.

சூர்யாவின் மாஸ் சீன் திரையரங்குகளில் விசில் பறக்கிறது.

கிளைமாக்ஸ் சர்ப்ரைஸாக சூர்யா. கொஞ்சமே வந்தாலும் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் தெறிக்க விடுகிறார்.

அவரது கதாபாத்திரத்துடன் ‘கைதி 2’ ஆக வருமா, ‘விக்ரம் 3’ ஆக வருமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

விக்ரம் திரைப்படத்தில் சந்தனம் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.

சின்ன சின்ன அசைவுகளில் கூட ரசிக்க வைத்திருக்கிறார் விஜய் சேதுபதி.

அலட்டல் இல்லாத இவரது நடிப்பு திரைப்படத்திற்கு பெரிய பலம் சேர்த்துள்ளது.

காயத்ரி, மைனா, சிவானி, மகேஷ்வரி ஆகியோர் கொடுத்த வேலையை மிக அருமையாக செய்திருக்கிறார்கள்.

Read Also  ஜீவி - திரை விமர்சனம்

தனக்கே உரிய பாணியில் நடித்து ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார் நரேன்.

அனிருத் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பரோ சூப்பர்.

பின்னணி இசையில் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார் அனிருத்.

கிரீஸ் கங்காதரனின் ஒளிப்பதிவு மிகவும் திரைப் படத்திற்கு பக்க பலமாக இருக்கிறது.

திரைப்படம் முழுவதும் இரவு நேரம் படப்பிடிப்பு என்பதால் லைட்டிங் அனைத்துமே அருமை

சண்டைப் பயிற்சி இயக்குனர்கள் அன்பறிவ். ஒவ்வொரு சண்டைக் காட்சியும் அலற வைக்கிறது.

படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ். எந்தக் குழப்பமும் இல்லாமல் திரைக்கதையோட்டம் கெடாதபடி பரபரப்பாக தொகுத்திருக்கிறார்.

போதை பொருளை மையமாக வைத்து ஆக்ஷன், சென்டிமென்ட், பழிக்கு பழி என திரைக்கதை அமைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார் இயக்குனர் லோகேஷ கனகராஜ்

மொத்தத்தில் ‘விக்ரம்’ திரைப்படம் வின்னிங.