நடிகர் மற்றும் கானா பாடகர் கில்லி மாறன் கொரோனா தொற்றினால் காலமானார்..

சென்னை 12 மே 2021

நடிகர் கில்லி மாறன் கொரோனா தொற்றினால் காலமானார்..செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நத்தம் பகுதியில் வசித்து வந்தவர் திரைப்பட நடிகர் கில்லி மாறன் . இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சில நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார்.

அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் , நடிகர் கில்லி மாறன் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி காலமானார்.

இவருக்கு வயது 48. 2004-ஆம் ஆண்டு நடிகர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான கில்லி திரைப்படத்தில் ஆதிவாசி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான இவர் இதை அடுத்து கில்லி டிஷ்யூம், பட்டாசு, தலைநகரம், வேட்டைக்காரன், கேஜிஎஃப் உள்ளிட்ட பல திரைப்படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

அவர் மேலும் கானா பாடல்களையும், மேடை கச்சேரிகளில் பாடி வந்துள்ளார்.

சமீபத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கு நடிகர் பாண்டு, இயக்குனர்கள் கே.வி.ஆனந்த், தாமிரா, பாடகர் கோமகன், நடிகர் ஜோக்கர் துளசி ஆகியோர் மரணம் அடைந்த நிலையில், தற்போது நடிகர் கில்லி மாறனும் கொரோனாவினால் மரணமடைந்திருப்பது மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!