டி பிளாக் திரை விமர்சனம் ரேட்டிங் :- 2.25 / 5.

நடிகர் நடிகைகள் :- அருள்நிதி, அவந்திகா மிஸ்ரா, எரும சாணி விஜய், கதிர், தலைவாசல் விஜய், ரமேஷ் கண்ணா, கரு.பழனியப்பன்
மற்றும் பலர்.

இயக்கம் :- விஜய்குமார் ராஜேந்திரன்.

ஒளிப்பதிவு :- அரவிந்த் சிங்.

படத்தொகுப்பு :- கணேஷ் சிவா.

இசை :- ரோன் எத்தன் யோஹசன்-கௌசிக் கிரிஷ்.

தயாரிப்பு :- எம்என்எம் பிலிம்ஸ்.

ரேட்டிங் :- 2.25 / 5.

தமிழ் திரைப்பட உலகில் கல்லூரி கதை என்றாலே கலகலப்பான காதல் கதையைத்தான் இயக்குவார்கள்.

ஆனால் இந்த டி பிளாக் திரைப்படத்தை ஒரு த்ரில்லர் திரைப்படமாக கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் விஜய்குமார் ராஜேந்திரன்.

கடந்த வருடம் நடிகர் வெற்றி நடிப்பில் வெளிவந்த ‘வனம்’ என்ற திரைப்படம் போல் இருக்கிறது.

அந்த திரைப்படத்தின் கதையும் இந்த டி பிளாக்
திரைப்படத்தின் கதையும் ஏறக்குறைய ஒரே மாதிரியாக தான் இருக்கிறது.

அந்த வனம் திரைப்படத்தில் பேய் இருக்கிறது.

இந்த டி பிளாக் திரைப்படத்தில் சைக்கோ அது மட்டுமே மாற்றப்பட்டுள்ளது.

அடர்ந்த காடு பகுதிகளில் நடுவில் அமைந்திருக்கும் ஒரு கல்லூரியில் கதாநாயகன் அருள்நிதி கல்லூரியில் படிக்க முதலாம் ஆண்டு சேர்கிறார்.

இந்த கல்லூரி வளாகத்தை விட்டு மாணவ மாணவிகள் ஆறு மணிக்கு மேல் வெளியே வரவேண்டாம் இங்கு சிறுத்தை உலாவுகிறது என கல்லூரி நிர்வாகத்தால் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

இருந்தும் இதனை பின்பற்றாதபோது மாணவ மாணவிகளுக்கு சில சிக்கல்கள் ஏற்படுகிறது.

கதாநாயகன் அருள்நிதியின் வகுப்பில் படிக்கும் தோழிகளில் ஒருவரான பரதநாட்டிய நடனக் கலைஞர் சுவாதி மர்மமான முறையில் இறந்து விடுகிறார்.

அவருடைய உடல்களில் சில காயங்கள் இருப்பதால் கல்லூரி நிர்வாகம் சிறுத்தை தாக்குதலாக இருக்கும் என்று அந்த கொலையை மூடி மறைக்கின்றனர்.

இதுபோன்ற தொடர்ச்சியான கல்லூரியில் உள்ள மாணவிகள் மரணம் குறித்து சந்தேகம் ஏற்படும் கதாநாயகன் அருள்நிதி தனது
நண்பர்களுடன் சேர்ந்து இந்த தொடர் மரணத்திற்கான காரணத்தை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்.

கதாநாயகன் அருள்நிதி இந்த மரணத்திற்கான காரணம் என்ன? எதனால் இந்த கொலை நிகழ்த்தப்படுகிறது? இந்த கொலைகளை யார் செய்கிறார்? இந்த கொலைக்கான காரணம் என்ன? கதாநாயகன் அருள்நிதி கல்லூரியில் நடக்கும் கொலைக்கான காரணத்தை கண்டுபிடித்தாரா? கண்டுபிடிக்கவில்லையா?
என்பதுதான் இந்த டி பிளாக் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த டி ப்ளாக் திரைப்படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடித்திருக்கிறார்

கதாநாயகன் அருள்நிதியின் முந்தைய திரைப்படங்களில் தோன்றும் திரில்லர் அம்சங்கள் குறைந்திருப்பதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைகின்றனர்.

கதாநாயகன் அருள்நிதியின் தேர்ந்த நடிப்பு திரைப்படத்தில் இருந்து விலகி செல்லாமல் கவனமாக நடித்திருக்கிறார்.

கதாநாயகன் அருள்நிதியின் நடிப்பு திரைப்படத்திற்கான உண்மையான வேலையைச் செய்திருக்கிறது.

நல்ல நல்ல கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிக்கும் அருள்நிதி இந்தப் திரைப்படத்தை எப்படித் தேர்வு செய்தார் என்பது ஆச்சரியமாக உள்ளது.

கதாநாயகன் அருள்நிதிக்கான ஸ்கோப் திரைப்படத்தில் பெரிதாக இல்லை என்பது வருத்தமாக இருக்கிறது.

திரைப்படத்தின் கடைசி காட்சிகளில் கூட வில்லனை கதாநாயகன் அடிக்காமல், கல்லூரி விடுதியில் இருக்கும் மாணவ மாணவிகள் மட்டுமே அடித்து உதைப்பது போலக் காட்டி, கதாநாயகனுக்கான வேலையை வேட்டு வைத்து விட்டார்கள்.

இந்த டி பிளாக் திரைப்படத்தில் அவந்திகா மிஸ்ரா கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

கதாநாயகி அவந்திகா மிஸ்ரா தனது பணியை சரியாக செய்து முடித்திருக்கிறார்.

கதாநாயகி அவந்திகா மிஸ்ரா பாடல் காட்சி திரில்லர் காட்சி என அவரின் பங்களிப்பு சிறப்பாக அமைந்துள்ளது.

கதாநாயகன் அருள்நிதியின் ஜோடியாக கதாநாயகி அவந்திகா, ஆரம்பத்தில் கொஞ்சம் சிரித்த முகமாக இருக்கிறார்.

அதன்பின் பயத்தில் அழுது வடிகிறார்.

காதலிப்பதைத் தவிர இவருக்கு வேறு வேலையில்லை.

ரமேஷ் கண்ணா இவர்களின் தேர்ந்த நடிப்பு அனைவரின் பாராட்டுக்களையும் பெறுகிறது.

எஞ்சினியரிங் கல்லூரியில் முதலாமாண்டிலேயே ஒரு மாணவர் பல வருடங்களாகப் படிக்கிறாராம் என்ற கதாபாத்திரம் ஒன்றையும் திரைப்படத்தில் வைத்திருக்கிறார்கள்.

அந்த கதாபாத்திரத்தில் முழு திரைப்படத்திலும் ஆதித்யா கதிர் மிக காமெடியில் அருமையாக நடித்திருக்கிறார்.

திரைப்படத்தின் இயக்குனர் விஜய் நண்பர்கள் கூட்டத்தில் ஒருவராக நடித்திருக்கிறார்.

லேடீஸ் ஹாஸ்டல் வார்டனாக மிரட்டும் குரலில் பேசுவதுடன் உமா ரியாஸ் நடிப்பு மிக மிக மிரட்டலாக இருக்கிறது.

ஒரே ஒரு காட்சியில் கல்லூரி ஓனர் இயக்குனர் கருபழனியப்பன் வந்து செல்கிறார்.

சைக்கோவாக சரண் தீப், பார்வையாலேயே மட்டுமல்ல நடிப்பிலும் உருவத்திலும் மிரட்டுகிறார்.

அறிமுக இயக்குனர் விஜய்குமார் ராஜேந்திரன் யு டியூபிலிருந்து சினிமாவுக்கு வந்திருப்பவர்.

யு டியூபில் நாம் எப்படி எடுத்தாலும், என்ன எடுத்தாலும் பார்ப்பார்கள், அது போலவே சினிமாவும் அப்படிதான் என நினைத்துவிட்டார் போலிருக்கிறது.

அமெச்சூரான காட்சிகள், சிரிப்பே வராத நகைச்சுவைக் காட்சிகள், கொஞ்சமான த்ரில்லர் என திரைப்படத்தை நகர்த்தியிருக்கிறார்.

இசையமைப்பாளர் ரோன் எத்தன் யோஹன் பின்னணி இசை ரசிக்க வைக்கிறது.

ரோன் ஈத்தன் யோகனின் பின்னணி இசை திரைப்படத்திற்கு வலுசேர்த்திருக்கிறது.

இவரின் முந்தைய திரைப்படங்களில் கொடுத்திருந்த விறுவிறுப்பான இசை போன்று இந்த திரைப்படத்தின் இசையும் திரைக்கதைக்கு உதவி இருக்கிறது.

ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் ஒளிப்பதிவு இரவு நேரக் காட்சிகளில் மட்டும் கொஞ்சம் மிரட்டலைத் தருகிறது.

அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவு எதார்த்தமாக திரைப்படத்திற்குள் அமைந்திருக்கிறது.

மொத்தத்தில் டி பிளாக் திரைப்படம் வீரியம் இல்லை.