தனுஷ், நீ ஒரு நடிகன் என நான் நினைத்தேன், ஆனால் நீ ஒரு மந்திரவாதி” பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல் ராய்.

சென்னை 18 மே 2021

தனுஷ், நீ ஒரு நடிகன் என நான் நினைத்தேன், ஆனால் நீ ஒரு மந்திரவாதி” பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல் ராய்

நடிகர் தனுஷ் நடித்த ‘கர்ணன்’ திரைப்படம் கடந்த ஏப்ல் மாதம் திரையரங்குகளில் வெளியானது.

திரையரங்குகளில் வசூலை வேட்டையாடிய இந்த ‘கர்ணன்’ திரைப்படம் கடந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது.

தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் தனுஷ்.

இந்த நிலையில் நடிகர் தனுஷ் நடித்துள்ள ‘கர்ணன்’ திரைப்படத்தை ஓடிடியில் பார்த்த பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய், நடிகர் தனுஷ் இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் படக்குழுவினரையும் வெகுவாக பாராட்டி இருக்கிறார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

“அற்புதம், புத்திசாலித்தனம்… இப்படித்தான் கர்ணன் படத்தின் அனுபவத்தை என்னால் விவரிக்க முடியும்.

மாரி செல்வராஜ், என்ன ஒரு அற்புதமாக கதையை சொல்லியிருக்கிறார்.

உங்கள் எண்ணங்களை செல்லுலாய்டில் அழகாக வர்ணம் பூசி இருக்கிறீர்கள்.

தனுஷ், நீ ஒரு நடிகன் என நான் நினைத்தேன், ஆனால் நீ ஒரு மந்திரவாதி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கிய ‘ராஞ்சனா’ திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.

தற்போது பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் நடிகர் தனுஷ் மேலும் ஒரு இந்தி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

‘அத்ரங்கி ரே’ என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

கொரோனா வைரஸ் நோய் தொற்று காலம் முடிந்ததும் திரையரங்குகள் திறந்தவுடன் இந்த திரைப்படம் வெளியாகும்.

https://twitter.com/aanandlrai/status/1394146899712749568?s=19

 

error: Content is protected !!