நடிகர் ராம் சரண் நடிப்பில் RC15 திரைப்படத்தின் பட்ஜெட் தொடர்பான சர்ச்சைகளில் இயக்குனர் ஷங்கர் சிக்கி உள்ளார்.
சென்னை 23 ஆகஸ்ட் 2022 நடிகர் ராம் சரண் நடிப்பில் RC15 திரைப்படத்தின் பட்ஜெட் தொடர்பான சர்ச்சைகளில் இயக்குனர் ஷங்கர் சிக்கி உள்ளார்.!
தமிழ்த் திரைப்பட உலகில் மிகப் பிரம்மாண்டத்துக்கு பெயர் எடுத்தவர் இயக்குநர் ஷங்கர்.
இவர் இயக்கிய திரைப்படங்களில் காட்சிகள், மற்றும் பாடல்கள் என அனைத்துமே மிகப் பிரமாண்டமாக உருவாக்கப்படும்.
இயக்குனர் ஷங்கர் தற்போது உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படத்தையும், தெலுங்கு நடிகர் ராம் சரணின் RC15 திரைப்படத்தையும் தற்போது இயக்கி வருகிறார்.
நடிகர் ஆக்சன் கிங் அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த
ஜென்டில்மேன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகிற்கு இயக்குநராக அறிமுகமான இயக்குனர் ஷங்கர், அடுத்தடுத்து காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், பாய்ஸ், அந்நியன், சிவாஜி, எந்திரன், ஐ, 2.O என அனைத்துமே மிக பிரம்மாண்டமான திரைப்படங்களை இயக்கி ரசிகர்களை மிரள வைத்தவர் இயக்குனர் ஷங்கர்.
திரைப்படத்தில் கதையே இல்லையென்றாலும் அதை திரைப்படமாக்குவதிலும், அந்த திரைப்படத்தில் இடம்பெறும் பாடல் காட்சிகளிலும் பிரம்மாண்டத்தை மட்டுமே கொட்டித் தீர்த்து, திரைப்பட ரசிகர்களை பார்க்க வைத்துவிடுவார்.
இப்படி பிரம்மாண்டத்தை எடுத்ததால் அவருக்கு தமிழ் திரைப்பட உலகில் பிரம்மாண்ட இயக்குநர் என்ற பெயர் வந்தது.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருந்த சிவாஜி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற அமைந்து மிகப்பெரிய வசூலை ஈட்டியது.
அதன் பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் மட்டுமே வசூலில் ஒரளவு கைகொடுத்தது என சொல்லப்படுகிறது.
ஐ, 2.O ஆகிய திரைப்படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை ரசிகர்களிடம் பெறவில்லை எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ‘இந்தியன் 2’ திரைப்படத்தை தொடங்கினார் இயக்குனர் ஷங்கர்.
ஆனால், இந்தியன் 2 படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்தில் 3 உதவி இயக்குநர்கள் உயிரிழக்க படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
அதோடு பட்ஜெட்டையும் குறைக்க வேண்டும் என, லைக்கா நிறுவனம் ஷங்கரிடம் வலியுறுத்த, சிக்கல்கள் இன்னும் அதிகமாகின.
இதனால் இந்தியன் 2 படப்பிடிப்பு கிடப்பில் போடப்பட்டது.
தற்போது மீண்டும் இந்தியன் 2 தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியன் 2 படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதால், இந்தியில் ரன்வீர் சிங் நடிப்பில் அந்நியன் திரைப்படத்தின் மொழி மாற்றம் செய்ய திட்டமிட்டார் இயக்குனர் ஷங்கர்.
ஆனால், கதை உரிமை விவகாரத்தில் ‘அந்நியன்’ திரைப்பட தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கும் இயக்குனர் ஷங்கருக்கும் இடையில் பிரச்சினை எழுந்தது.
அதனால், ஹிந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட இருந்த அந்நியன் திரைப்படம் திட்டம் அப்படியே கைவிடப்பட்டது.
இதனால், தெலுங்கு திரைப்பட உலகில் உள்ள பிரபல நடிகர் ராம் சரண் நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார் இயக்குனர் ஷங்கர்.
தற்காலிகமாக RC 15 என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை, பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்து வருகிறார்.
மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக இப்போது தகவல் கசிந்துள்ளது.
முக்கியமாக திரைப்படத்தில் இரண்டு கலை இயக்குநர்கள் மாறிவிட்டதாகவும், தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்த சுரேந்தர் ரெட்டி என்பவரும் விலகிவிட்டதாக சொல்லப்படுகிறது.
ஒரு பாடல் காட்சி எடுப்பதற்காக ரஷ்யாவில் இருந்து 100 ரஷ்யாவில் இருந்து நடன பெண்களை இறக்குமதி செய்த இயக்குனர் ஷங்கர் அதுக்காக மட்டுமே 7 கோடி ரூபாய் வரை செலவு செய்ததாகவும், இதனால், தயாரிப்பாளர் தில் ராஜூ இயக்குனர் ஷங்கரிடம் கடுப்பானதாகவும் தெரிகிறது.
அதேபோல், கல்லூரி செட் அமைத்து படமாக்க வேண்டும் என்று இயக்குனர் ஷங்கர் கேட்டதாகவும், அதற்கு உண்மையான கல்லூரியிலேயே படப்பிடிப்பு நடத்தலாம் என தயாரிப்பாளர் தில் ராஜூ கூறியதாக சொல்லப்படுகிறது.
ஆனால் இயக்குனர் ஷங்கர் கல்லூரியை செட் அமைத்து திரைப்படமாக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், திட்டமிட்ட பட்ஜெட்டைவிட ஏற்கனவே அதிகம் செலவாகி விட்டதால் தயாரிப்பாளர் தில் ராஜு இன்னும் கல்லூரி செட் அமைக்க ஓகே சொல்லவில்லை என தெரிகிறது.
இதனிடையே தெலுங்கு திரைப்பட உலகில் வேலை நிறுத்தமும் தொடங்கியது.
மேலும், இயக்குனர் ஷங்கர் தற்போது இந்தியன்-2 திரைப்படத்தை தொடங்கவுள்ளார்.
இந்த திரைப்படம் முடித்த பின்னர் தான் ‘RC 15’ வேலைகள் தொடங்கும் தெலுங்கு திரைப்பட உலக வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகின்றன.
இயக்குனர் ராஜமெளலி இயக்கத்தில் ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படத்தில் மாஸ் காட்டிய நடிகர் ராம் சரண், இப்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடித்து வருவதால் உற்சாகத்தில் இருந்தார்.
ஆனால், இயக்குனர் ஷங்கர் – தயாரிப்பாளர் தில் ராஜூ இடையேயான பிரச்சினையால் இப்போது நடிகர் ராம் சரண் கலக்கத்தில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
அதேபோல் கடந்த சில வருடங்களாகவே இயக்குநர் ஷங்கர் பட்ஜெட் தொடர்பான சர்ச்சைகளில் சிக்கி வருவது, அவரது ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.











