திடீர் திருப்பம்… அறிவித்தப்படியே சிலம்பரசன் பிஆர் நடிப்பில் மாநாடு திரைப்படம் நாளை ரிலீஸ் ஆகும் செம குஷியில் ரசிகர்கள்!

சென்னை 24 நவம்பர் 2021 திடீர் திருப்பம்… அறிவித்தப்படியே சிலம்பரசன் பிஆர் நடிப்பில் மாநாடு திரைப்படம் நாளை ரிலீஸ் ஆகும் செம குஷியில் ரசிகர்கள்!

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் டிஆர் நடித்துள்ள திரைப்படம் மாநாடு.

இந்த மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பங பெரும் இழுபறிக்கு பின்னர்தான் தொடங்கியது.

ஒரு வழியாக இந்தப் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. படப்பிடிப்பு நிறைவடைந்ததை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.

இதனை தொடர்ந்து திரைப்படத்தின் போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் படுதீவிரமாக நடைபெற்று வந்தது.

தயாரிப்பாளருமான சுரேஷ் காமாட்சி இந்த மாநாடு திரைப்படத்தை தயாரித்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஜே சூர்யா, எஸ்ஏ சந்திரசேகர், ஓய்ஜி மகேந்திரன் என பெரும் நடிகர் பட்டாளமே திரைப்படத்தில் நடித்துள்ளது.

இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த மாநாடு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் நடைபெற்றது.

இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இதுவரை பல முறை மாற்றப்பட்டுள்ளது.

அதன் பின்னர் நவம்பர் 25-ஆம் தேதியான நாளை மாநாடு திரைப்படம் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதனால் டிக்கெட் முன்பதிவு செய்யும் வேலை மற்றும் போஸ்டர் ஒட்டும் பணிகளில் ரசிகர்கள் தீவிரமாக இருந்தனர்.

ஆனால் அறிவித்தப்படி மாநாடு திரைப்படம் நாளை ரிலீஸ் ஆகாது என படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்தார்.

இதனால் சிலம்பரசன் டிஆரின் ரசிகர்கள் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்தனர்.

இந்நிலையில் திடீர் திருப்பமாக அறிவித்தப்படியே நாளை மாநாடு திரைப்படம்திரைப்படம் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!