திருமண உறவில் இருந்து விலகுவதாக பிரபல நடிகை ஷீலா ராஜ்குமார் அறிவிப்பு!!
திருமண உறவில் இருந்து விலகுவதாக பிரபல நடிகை ஷீலா ராஜ்குமார் அறிவிப்பு!!
சென்னை 02 டிசம்பர் 2023 திருமண உறவில் இருந்து விலகுவதாக பிரபல நடிகை ஷீலா ராஜ்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
2016 ஆம் ஆண்டு நடிகர் அருண் விஜய் நடிப்பில் வெளியான ‘ஆறாது சினம்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஷீலா.
பரதநாட்டியக் கலைஞரான இவர், ’கூத்துப்பட்டறை’ மூலம் பல்வேறு மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார்.
அதனை தொடர்ந்து ‘டூலெட்’ என்ற திரைப்படத்தில் நடித்தார்.
அந்த திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல பெயரை அவருக்கு பெற்றுத் தந்தது.
அதனை தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
நடிகர் யோகி பாபு நடிப்பில் வெளியான ‘மண்டேலா’ திரைப்படத்தில் தபால் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்றவர்.
அதனை தொடர்ந்து நல்ல கதைகள் உள்ள திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.
நடிகர் சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப் பிள்ளை, அசுரவதம், பேட்டைக்காளி இணைய தொடர், ஜோதி, பிச்சைக்காரன் 2, நூடுல்ஸ் இந்த ஆண்டு தீபாவளிக்கு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தில் எஸ்.ஜே சூர்யாவின் காதலியாக நடித்திருந்தார்.
இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் திரௌபதி திரைப்படத்தில் ரிச்சர்ட் ரிஷிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இப்படம் ஜாதி திரைப்படம் என்ற சர்ச்சையை ஏற்படுத்தியது.
பேட்டைக்காளி இணைய தொடரில் ஜல்லிக்கட்டு காளை வளர்க்கும் பெண்ணாக நடித்து அசத்தியிருப்பார்.
இவர் நடிப்பு பயிற்சி பள்ளி வைத்துள்ள சோழன் என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார்
இந்த நிலையில், தனது திருமண வாழ்க்கையில் இருந்து வெளியேறுவதாக நடிகை ஷீலா தனது சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்துள்ளார்.
தனது கணவரை டேக் செய்து தனது இந்த முடிவை அவர் அறிவித்துள்ளார்.
மேலும் தனது கணவர் உடனான புகைப்படங்களையும் சமூக வலைதள பக்கத்தில் இருந்து ஷீலா நீக்கியுள்ளார்.
https://twitter.com/sheelaActress/status/1730807553666482404?t=qjG2x5Pr5lkr5MWwE3YSxA&s=19











