பிரபல பாடகி வாணி ஜெயராம்   மறைவு  “மலை ” படக்குழுவினர் வருத்தம்.

சென்னை 04 பிப்ரவரி 2023  பிரபல பாடகி வாணி ஜெயராம்   மறைவு  “மலை” திரைப்படக் குழுவினர் வருத்தம்.!

பிரபல பழம்பெரும் பாடகி “பத்ம பூஷன் ” திருமதி.வாணி ஜெயராம்  அவர்களின் திடீர் மறைவு தமிழ் சினிமா உலகிற்கும் , இசை உலகிற்கும் பெரும் இழப்பு.

திருமதி. வாணி ஜெயராம் அவர்கள் கடைசியாக சில படங்களில் பாடியிருந்தார் .

அதில் இசையமைப்பாளர் D.இமான் இசையில் ‘மலை’ திரைப்படத்திற்கு பாடியது அவர் பாடிய இறுதி திரை இசைப்பாடலாகும்.

லெமன் லீப் கிரியேசன்ஸ் தயாரிப்பில் யோகி பாபு , மற்றும் லஷ்மி மேனன் நடிப்பில் இந்த படம் வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது.

இந்த படத்தின் இசை விழாவை  பெரும் விமரிசையாக நடத்தவும்,
“பத்ம பூஷன்”திருமதி.வாணி ஜெயராம் அவர்களை கவுரவிக்கும் விதமாகவும் தனிப்பெரும் பாராட்டு விழாவாகவும் நடத்த படக்குழுவினர்  திட்டமிட்டிருந்த நிலையில்  அவரின் திடீர் மறைவு படக்குழுவினருக்கு பெரும் சோகத்தையும் , அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இமான் இசையில் அவர் பாடிய பாடல் உள்ளத்தை வருடும் படி வாழ்வில் நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக இருப்பதாகவும்,  இந்த பாடலை அவருக்கு காணிக்கையாக்குவதாகவும் படக்குழுவினர் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.