பாரத ரத்னா பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனாவில் இருந்து பூரண குணமடைந்தார்.
சென்னை 30 ஜனவரி 2022
பாரத ரத்னா பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனாவில் இருந்து பூரண குணமடைந்தார்.
மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வந்த பாடகி லதா மங்கேஷ்கர் குணமடைந்து வீடு திரும்பினார்.
இந்தியாவில் கொரோனா நோய் தொற்று பரவல் வேகம் அதிகரித்துள்ள நிலையில் திரைப்பட துறையினர், அரசியல் விளையாட்டுத்துறைகளை சேர்ந்த பிரபலங்களுக்கும் கொரோனா நோய் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது.
சமீபத்தில் இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும்.
பழம் பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனா நோய் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார்.
இதனை அடுத்து அவர் மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் அவரது உடல் நிலையை தீவிரமாக கண்காணித்து வந்த நிலையில் அவரது உடல் முன்னேற்றம் அடைந்து அவர் பூரணமாக குணமைடைந்துள்ளார்.
இந்த செய்தியை அவருடைய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
லதா மங்கேஷ்கர், தாதாசாகேப் பால்கே விருது மற்றும் பிரான்சின் உயரிய விருது, உள்பட பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை பெற்றுள்ளார்.
கடந்த 2001 ஆம் இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது லதா மங்கேஷ்கருக்கு வழங்கப்பட்டது.
1948 முதல் 1974 க்கு இடையில் 25,000 பாடல்களுக்கு மேல் அவர் பாடி இருக்கிறார்.











