தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஜி.கே. எம்.தமிழ் குமரன் புதிய தலைவராக தேர்வு !!
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஜி.கே. எம்.தமிழ் குமரன் புதிய தலைவராக தேர்வு !!
சென்னை, 23 பிப்ரவரி தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும்.
2026 2029-ஆம் ஆண்டுகளுக்கான தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் 22, பிப்ரவரி 2026,சென்னை அண்ணாநகரில் உள்ள கந்தசாமி நாயுடு கல்லூரியில் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் அவர்களின் தலைமையில் தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் முன்னாள் தலைவர் முரளி ராமசாமியின் ராம நாராயணன் அணி மற்றும் ஜி.கே.எம். தமிழ்குமரனின் நலன் காக்கும் அணி என இரண்டு அணிகளாக போட்டியிட்டனர்.
இந்த நிலையில் கதிரேசன், ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் ஆகியோரும் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டனர்.
தலைவர் பதவிக்கு ஒரு நபரும், துணைத் தலைவர்கள், பதவிக்கு இரண்டு நபர்களும் பொதுச் செயலாளர் பதவிக்கு ஒரு நபரும், பொருளாளர் பதவிக்கு ஒருவரும் இணைச் செயலாளர்கள், மற்றும் 26 செயற்குழு உறுப்பினர்கள் என மொத்தம் 33 பதவிக்கு 126 பேர் போட்டியிட்டனர்.
தேர்தல் வாக்குப்பதிவு காலை 8 மணி அளவில் தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது.
இந்த தேர்தலில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வாக்களிக்க உரிமை உள்ள உறுப்பினர்கள் 1,576 பேர் அதில் 1171 உறுப்பினர்கள் மட்டுமே வாக்குகளை அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து மாலை 6.15 மணிக்கு அனைத்து பதவிக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில், தலைவர் பதவிக்கு போட்டியிட்டு
நலன் காக்கும் அணி சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ் குமரன் 788 வாக்குகள் பெற்று 527 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் இத்தனை ஆண்டு காலம் நடந்த தேர்தலில் அதிக வாக்குகள் எண்ணிக்கையில் வெற்றி பெற்ற பெருமையைப் பெற்றவர் தலைவர் ஜி கே எம் தமிழ் குமரன்.
ராம நாராயணன் அணி சார்பில் முரளி ராமசாமி 261 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
2 துணைத் தலைவர்கள் பதவிக்கு போட்டியிட்ட தயாரிப்பாளர் கமலக்கண்ணன், ஆர்கே சுரேஷ் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்
இரண்டு பொது செயலாளர் பதவிக்கு சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட தயாரிப்பாளர் கதிரேசன் 715 வாக்குகள் மற்றும் ராதாகிருஷ்ணன் 470 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.
இணை செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட தயாரிப்பாளர் சுஜாதா விஜய்குமார் 715 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட தயாரிப்பாளர் சுபாஷ் சந்திரபோஸ் 609 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
26 செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு வெற்றி பெற்றவர்கள்.
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் : வெற்றி பெற்ற செயற்குழு உறுப்பினர்கள்
01.தேனப்பன் – 698
02. அழகன் தமிழ்மணி – 684
03. பைஜாடாம் – 674
04. சித்ரா லட்சுமணன் – 639
05. ஏழுமலை – 633
06. தாய் சரவணன் – 606
07. முருகன் – 605
08. மகேந்திரன் – 600
09.ஞானவேல் – 580
10. இசக்கிராஜா – 574
11. மாதேஷ் – 569
12. தன சண்முகமணி – 556
13. டேவிட்ராஜ் – 527
14. சாலை சகாதேவன் – 527
15. H. முரளி – 526
16. ஜோதி – 519
17. கபார் – 496
18. ரஞ்சித்குமார் – 494
19. பியாரிலால் – 486
20. செந்தாமரை கண்ணன் – 479
21. ராஜராஜன் – 475
22. பாலாஜி – 467
23. ஜெயசீலன் – 466
24. முருகன் – 454
25. அன்பு – 443
26. பழனிவேல் – 440
தற்போதைய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொறுப்பாளர்களின் பதவி காலம் வருகின்ற ஏப்ரல் மாதத்துடன் நிறைவடையும் நிலையில் புதிய தலைவர் 2029 வரை தலைமையில் இருப்பார்கள்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜி கே எம் தமிழ் குமரனுக்கு திரையுலகினர் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.











