ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் ‘அடியே’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்றிருக்கிறது!!
ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் ‘அடியே’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்றிருக்கிறது!!மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் பிரபா பிரேம்குமார் தயாரிப்பில் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார்- கௌரி கிஷன் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்த ‘அடியே’ திரைப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது.
இந்தத் திரைப்படம் ஆகஸ்ட் 25ஆம் தேதி அன்று வெளியானது.
வெளியான முதல் நாளில் எதிர்பார்த்ததை விட கூடுதலாக வசூல் செய்த இந்த திரைப்படம், இரண்டாவது நாள் அதைவிட கூடுதலாகவும், மூன்றாவது நாள் அதைவிட கூடுதலாகவும் வசூலித்து இந்த வாரம் வெளியான திரைப்படங்களில் அதிக வசூலை ஈட்டிய திரைப்படமாக ‘அடியே’ வெற்றி பெற்றிருக்கிறது.
மேலும் இந்த திரைப்படம் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் உலக நாடுகளிலும் வெளியாகவிருக்கிறது.

அதன் பிறகு இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என திரையுலக வணிகர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஆல்டர்நேட்டிவ் ரியாலிட்டி.. மல்டிவெர்ஸ்.. பேரலல் யுனிவெர்ஸ்… எனும் சயின்ஸ் பிக்சனுடனும், டைம் டிராவல்.. டைம் லூப்.. எனும் இளைய தலைமுறையை கவரும் உத்திகளால் சுவாரசியமான காதல்… திரைக்கதையாக இப்படத்தில் இடம்பெற்றதால், அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து, பேராதரவினை பெற்று, பிரம்மாண்டமான வெற்றியை பதிவு செய்து வருகிறது.
‘அடியே’ படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தை தயாரித்த மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், தொடர்ந்து தமிழ் திரையுலகில் தரமான படைப்புகளை வழங்கி முன்னணி பட தயாரிப்பு நிறுவனமாக உயரும் என்பது உறுதியாகி இருக்கிறது.Related posts:
ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘அடியே..’ படத்தின் மோசன் போஸ்டர் வெளியீடு.!!
ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘அடியே’ திரைப்படம் ஆகஸ்ட் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.!!
நடிகர் ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘அடியே’ திரைப்படம் பேரலல்யுனிவெர்ஸ் மற்றும் ஆல்டர்நேட் ரியாலிட்டி ஜானரில் உருவாகியுள்ளது!!
நடிகர் கருணாஸ் நடிப்பில் தயாரான ‘ஆதார்’ திரைப்படம் தணிக்கை செய்யப்பட்டு, ‘யு/ஏ ‘சான்றிதழ் பெற்றிருக்கிறது.
திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின முதல் வார வசூல் வசூல் சந்தோஷத்தில் நடிகர் தனுஷ்.!!!
நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த விருமன் திரைப்படம் உலகம் முழுவதும் வசூல் வேட்டையாடி வருகிறது!!!
ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் புதிய திரைப்படம் ‘ஐங்கரன்’ 21-ஆம் தேதி கலர்ஸ் தமிழ் தொலைக் காட்சியில் ஒளிபரப்பு!!
வசூல் மன்னன் தளபதி விஜய் !
அவதார் தி வே ஆஃப் வாட்டர்’ திரைப்படம் வெளியாகி முன்று நாட்களில் இந்திய அளவில் ரூ.160 கோடியை வசூலித்துள்ளது.!
நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான விருமனி’ன் வசூல் சாதனைக்காக பட குழுவினருக்கு வைரக்காப்பு பரிசு!!

